உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்: ஸ்பெயினில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்: ஸ்பெயினில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் ஸ்பெய்னில் இருந்து காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.தமிழக சட்டசபை கூட்டம், வரும், 12ம் தேதி துவங்குகிறது. அன்று காலை 10:00 மணிக்கு, கவர்னர் ரவி உரையாற்ற உள்ளார். 19ம் தேதி 2024 - 25ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் ஸ்பெயின் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக அரசு உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.இது குறித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் 12ம் துவங்கவுள்ள சட்டசபை கூட்டத்தொடரில் கவர்னர் உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும், 19ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கை குறித்தும் நிதித்துறை முதன்மைச் செயலாளர், வளர்ச்சித்துறை ஆணையர் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஸ்பெய்னில் இருந்து காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கினேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

ஆரூர் ரங்
பிப் 05, 2024 12:16

மற்றபடி இங்கு முதலீடு செய்யுமளவுக்கு அங்கு பொருளாதாரமில்லை.


Raa
பிப் 05, 2024 11:31

கிளம்பு...கிளம்பு... இன்றைய போட்டோ ஷூட்டு முடிந்தது.


sonki monki
பிப் 05, 2024 10:02

நம்ம சுடாலினுக்கு தமிலே தகராறு என்ன மொழில சபைல போய் பேசுவார் ஸ்பைன்ல


ஆரூர் ரங்
பிப் 05, 2024 12:20

கணக்கில் மட்டும் புலி? 87 பிளஸ் 9 எவ்வளவு,? ????107


பேசும் தமிழன்
பிப் 05, 2024 08:54

தமிழக பட்ஜெட் பற்றி இனிமேல் தலைவர்... சந்திர மண்டலத்தில் இருந்து.... ஆலோசனை செய்யாதது தான் பாக்கி.... அந்த அளவுக்கு தமிழ்நாட்டை நீடிக்கிறாராம் !!!!


sankar
பிப் 05, 2024 06:33

மிகப்பெரிய கில்லாடி சார்


Mani . V
பிப் 05, 2024 06:09

தலைக்கு தில்லை பார்த்தியா? போற போக்கைப் பார்த்தால் தலை ஸ்பெயினுக்கே பட்ஜெட் போட்டு அசத்துனாலும் அசத்துவார். ஆமா, தலை இந்த பட்ஜெட் ஆலோசனை கூட்டத்துக்காகத்தான் ஸ்பெயினுக்கு போனீர்களா? அசத்துங்க.


Libra
பிப் 05, 2024 06:02

மிசா பேரைசொல்லி வேற கேசுல தாவங்கட்டைல அடி வாங்கின அடையாளம் மறைஞ்சே போச்சு.


ராஜா
பிப் 05, 2024 04:45

ஏதோ பழைய முரசொலியை கொண்டுபோய் எழுத்துக்கூட்டுற மாதிரி தெரியுது ????


ராஜா
பிப் 05, 2024 04:43

இதுவும் ஏதோ ஃபோட்டோ சூட் போல் தான் தெரிகிறது. ஒருவேளை இவர் கோவிச்சுகிட்டு எதுவும் போயிருப்பாரோ!?


sankar
பிப் 05, 2024 03:49

பட்ஜெட்டை ஆய்ந்தார் . ஆய்ஞ்சுட்டாலும்


மேலும் செய்திகள்





புதிய வீடியோ