உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமெரிக்க வரியால் தமிழக ஏற்றுமதி பாதிப்பு: நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

அமெரிக்க வரியால் தமிழக ஏற்றுமதி பாதிப்பு: நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: ''அமெரிக்க வரியால் தமிழக ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளது. தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணங்களை மத்திய அரசு வழங்க வேண்டும்'' என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zxn3y0uk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அமெரிக்கா விதித்த 50 சதவீத வரியால் திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி வர்த்தக பாதிப்பு ஏற்படும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியான செய்தியை மேற்கோள் காட்டி சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: அமெரிக்க வரியால் தமிழகத்தில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. திருப்பூரில் ரூ.3 ஆயிரம் கோடி ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வேலைகள் ஆபத்தில் உள்ளன. தமிழக தொழில்துறை மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவதூறுகளில்…!

தமிழகம் வேகமாக வளரும் பொருளாதாரம் மட்டுமல்ல, இந்தியாவின் மிகப்பெரிய தொழில்துறை சக்தி என தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இதனை மேற்கோள் காட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: திராவிடத்தால் வாழ்கிறோம். திராவிடமே நம்மை உயர்த்தும். எல்லோரையும் வாழ வைக்கும். அமித் ஷா முதல் பழனிசாமி வரை திமுக ஆட்சியைப் பழித்துரைக்கும் அனைவருக்கும் மத்திய பாஜ அரசே தந்துள்ள 'நெத்தியடி பதில்' இதோ. சட்டம் ஒழுங்கைப் பேணிக்காத்து, தொழில் செய்வதற்கான சூழலை மேம்படுத்தி, தடையற்ற மின்சாரம். போக்குவரத்து வசதிகள் என அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கி, வேலைக்குத் தேவையான திறன்களை இளம் தலைமுறையினருக்கு அளித்து நாம் நாளும் தீட்டிய திட்டங்களால் இந்தச் சாதனை சாத்தியமாகி இருக்கிறது. திமுக ஆட்சியின் சாதனைச் சரித்திரம் தொடரும். அரசியல் காழ்ப்புணர்வில் திமுக ஆட்சிக்கு எதிராக அள்ளிவீசப்படும் அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை என மக்கள் புறந்தள்ளுவார்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 73 )

நரேந்திர பாரதி
செப் 02, 2025 04:49

இப்படித்தான் திருட்டு திராடிய குன்றிய அரசு மத்திய அரசிடம் ... மிச்சமிருக்க காலத்தை ஓட்டணும் பிடுங்கிய மட்டும் லாபம்


Natarajan Ramanathan
ஆக 30, 2025 10:51

ஏதாவது காரணம் சொல்லி பிச்சை எடுப்பதே இவனுக்கு வேலையாக இருக்கிறது.


Sudha
ஆக 30, 2025 10:47

உடனே பணம் வேண்டும் பணம் வேண்டும் பல்லவி. நேரடியாக எனக்கு பணம் வேண்டும் னு கேட்டு வாங்கி ஓரமா உட்கார்நது சாப்பிடலாமே


Artist
ஆக 29, 2025 20:55

திராவிட மந்திரிமார்களும் முன்னணி தலைவர்களும் ட்ரம்பை விட செல்வந்தர்கள் …


SP
ஆக 28, 2025 20:57

பருத்திக்கு டிசம்பர் 31 வரை வரி விலக்கு அளித்து விட்டது மத்திய அரசு மேலும் 40 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது இதில் தமிழக நிறுவனம் ஆந்திர நிறுவனம் என்று பிரித்து பார்க்காமல் இந்திய நிறுவனம் என்று தான் மத்திய அரசு கருதுகிறது தேவையில்லாமல் அரசியல் செய்யாதீர்கள்


பேசும் தமிழன்
ஆக 28, 2025 19:29

நீங்கள் திராவிட மாடல் தலைவர் ஆயிற்றே..... நேரடியாக டிரம்ப் அவர்களிடமே போன் போட்டு பேசலாமே ???.... உலகம் முழுவதும் உங்களுக்கு செல்வாக்கு இருக்கிறது.


M Ramachandran
ஆக 28, 2025 16:47

சும்மா காமடி பண்ணாதீங்க. முரசொலியை மட்டும் மேம்போக்கா பிரட்டி பார்த்தால் போதாது. மற்ற தினசரிகளையும் பார்க்கணும் அல்லபடிக்கணும். நேற்று என்ன செய்தி என்று கூட தெரியாத முதல் அமைச்சர்னு சொல்ல போராங்க.


Kasimani Baskaran
ஆக 28, 2025 16:28

காசடிக்க வழியில்லை என்றால் தீம்க்கா ஒதுங்கிக்கொள்ளும்.


P Karthikeyan
ஆக 28, 2025 15:20

காசு காசு காசு கட்டையில் போறவரைக்கும் காசு ... வளர்ச்சி என்று ஒன்னாவாது கண்ணுல காட்டினீங்களா ...மேடைக்கு மேடை தலையில் இருக்கிற wiggu மட்டும் மாறுது ...ஆட்சி நாறுது ..


ArGu
ஆக 28, 2025 15:00

அட மக்கா விசயத்த தெரிஞ்சுக்குங்க தேங்கி கெடக்கற பொருளை எல்லாம் கட்டுமரகும்பல் கம்மி ரேட்டுக்கு அடிச்சி வாங்குதாம் எதுக்குன்னு யாருக்காவது தெரியுமா?


VSMani
ஆக 28, 2025 15:41

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் அடிக்கத்தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை