உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 23 வகை நாய்களுக்கு தமிழக அரசு தடை: முழு விபரம் இதோ!

23 வகை நாய்களுக்கு தமிழக அரசு தடை: முழு விபரம் இதோ!

சென்னை: 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்களை தடை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் வெளியான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கால்நடை பராமரிப்பு துறையின் வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த பங்கேற்பாளர்களுடன் ஏற்படுத்தப்பட்ட குழுவின் பரிந்துரையில் சுமார் 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்கள் மிகவும் ஆக்ரோஷமானவை எனவும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் எனவும் பட்டியலிடப்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0xo49eo2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த 23 வகை நாய் இனங்கள் மற்றும் அவைகளின் கலப்பினங்கள் இறக்குமதி செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் மற்றும் இவைகளின் எல்லா வகை பயன்பாட்டிற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட நாய் இனங்கள்

1. பிட்புல் டெரியர்2. தோசா இனு3. அமெரிக்கன் ஸ்டப்போர்டு ஷயர் டெரியர்4. பிலா ப்ரேசிலேரியா5. டோகா அர்ஜென்டினா6. அமெரிக்கன் புல் டாக்7. போயர் போயல்8. கன்சல்9. சென்ட்ரல் ஆசியன் ஷெபர்டு டாக்10. காக்கேஷியன் ஷெபர்டு டாக்11. சவுத் ரஷ்யன் ஷெபர்டு டாக்12. டோன் ஜாக்13. சர்ப்ளேனினேக்14. ஜாப்னிஸ் தோசா15. அகிதா மேஸ்டிப்16. ராட்வீலர்ஸ்17. டெரியர்18. ரோடீசியன் ரிட்ஜ்பேக்19. உல்ப் டாக்20. கேனரியோ அக்பாஸ் டாக்21. மாஸ்கோ கார்ட் டாக்22. கேன்கார்சோ23. பேண்டாக்

கட்டுப்பாடுகள்

* தற்போது வளர்ப்பு பிராணியாக மேற்கண்ட வகை நாய்களை வைத்திருப்போர் அவற்றை உடனடியாக ஆண் / பெண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.* நாய் வளர்ப்பவர் நாயை வெளியில் பொது இடங்களுக்கு கூட்டி செல்லும்போது கட்டாயமாக லீஷ் (இணைப்பு சங்கிலி) மற்றும் தற்காப்பு முகக்கவசம் அணிந்து அழைத்து செல்ல வேண்டும். * அந்த இணைப்பு சங்கிலி, நாயின் அகலத்திற்கு ஏற்றவாறு குறைந்தபட்சம் 3 மடங்கு நீளம் இருக்க வேண்டும்.* நல்ல தரமான கழுத்துப்பட்டை / தோள்பட்டை அணிவித்து நாய் உரிமையாளர்கள் தங்கள் செல்லப் பிராணிகளை வெளியே அழைத்துச் செல்வது, செல்லப் பிராணிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பாக அமையும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Tamil kumaran
மே 10, 2024 09:25

Please assign maintenanace team to maintain street dogs ?


s chandrasekar
மே 10, 2024 07:54

Good comment


rama adhavan
மே 09, 2024 21:20

இன்னும் ஒரு கண்டிஷன் இவ் வகை நாய்கள் வரும் போது,சாலையில் செல்லும் மனிதர்கள் தலை முதல் கால் வரை முழு இரும்பு கவசம் அணிந்து செல்ல வேண்டும் ஆமாம் நேற்று வரை இவை கட்டுப்பாடு இன்றி எப்படி சுதந்திரமாக அனுமதிக்கப் பட்டன?


Ram
மே 09, 2024 20:56

நாய் வளர்ப்பை முற்றிலும் தடைசெய்யலாம்


ஆரூர் ரங்
மே 09, 2024 20:54

ஆத்ம நிர்பார் திட்டப்படி எல்லோரும் நாட்டு நாய்களை மட்டுமே வளர்க்க உத்தரவிடலாம்.


PRSwamy
மே 09, 2024 20:34

முதலில், விலங்குகளை ஈன படுத்தவேண்டாம் அவைகளுக்கு நன்றி உண்டு மனித உருவில் உலாவும் மக்களை கொள்ளை அடிக்கும் சில கேடுகட்ட ஜென்மங்களை தடை செய்யலாம்


Kasimani Baskaran
மே 09, 2024 20:22

வாவ் ராக்கெட் வேகத்தில் தடை இதே வேகத்தை போதை மருந்து கடத்தல் கூட்டத்திடமும் காட்ட வேண்டும்


Kumar
மே 09, 2024 18:52

rajapalayam dog.. dabur man dog dangerous


Indian
மே 09, 2024 18:28

ஒரு பயனும் இல்லை பணம் திமிர் அதிகம் இருப்பவன் வளர்ப்பான் நீங்களும் பார்த்துக்கொண்டு தான் இருப்பீர்கள்


N Srinivasan
மே 09, 2024 17:53

இது எல்லாம் கொஞ்ச நாள்தான் முன்பு திருவல்லிக்கேணியில் தெருக்களில் மாடு சுற்றுவது பெரிய செய்தியாக வெடித்தது நமது ராதாகிருஷ்ணன் அங்கே சென்று கொஞ்சம் நடவடிக்கை எடுத்தார் இன்னும் அங்கே மாடு சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது அது போல தான்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை