உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மும்பை மழை பாதிப்பால் லைப் ஜாக்கெட் தாமதம் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

மும்பை மழை பாதிப்பால் லைப் ஜாக்கெட் தாமதம் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

மதுரை:மீனவர்களுக்கு லைப் ஜாக்கெட் வினியோகிக்க தாக்கலான வழக்கில், 'லைப் ஜாக்கெட் தயாரிப்பு நிறுவனம் மும்பையில் உள்ளதால், மழை பாதிப்பு காரணமாக வினியோக த்தில் தாமதம் ஆகிறது' என, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ க அரசு தெரிவித்தது.

ஆபத்து

கன்னியாகுமரி மாவட்டம், பூத்துறை அருளப்பன் தாக்கல் செய்த பொதுநல மனு: ஆண்டுதோறும் நாட்டுப்படகு மீனவர்கள், படகுகள், மண்ணெண்ணெய் மானியத்திற்கான உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். 2024 - 25ல் உரிமம் புதுப்பிக்க மீனவர்கள் விண்ணப்பித்தனர். தேங்காய்பட்டிணம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் 'லைப் ஜாக்கெட்கள் கட்டாயமாக வாங்க வேண்டும். இல்லையெனில் உரிமம் வழங்கப்படாது' என, உத்தரவிட்டார். இதில், 2,472 ரூபாயை வங்கி மூலம் மீன்வளத்துறைக்கு பிப்., 6ல் செலுத்தினேன். மேலும் பல மீனவர்கள் செலுத்தினர். இதுவரை லைப் ஜாக்கெட் வழங்கவில்லை. பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கடலுக்கு செல்வது ஆபத்தை ஏற்படுத்தும். லைப் ஜாக்கெட்களை விரைவில் வழங்க வேண்டும். நடவடிக்கை அரசு தரப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என, தமிழக மீன்வளத்துறை செயலர், இயக்குநர், கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. அரசு பிளீடர் திலக்குமார், 'தமிழகத்தில் ஒட்டுமொத்த கடற்கரை பகுதி மீனவர்களுக்கு நான்கு கட்டங்களாக லைப் ஜாக்கெட் வழங்கப் படுகிறது. 'ஏற்கனவே மூன்று கட்டமாக வினியோகம் முடிந்துவிட்டது. மொத்தம் 9,011 பேரில், மனுதாரர் உள்ளிட்ட 7,000 பேருக்கு லைப் ஜாக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அதை தயாரிக்கும் நிறுவனம் மும்பையில் உள்ளது. 'அங்கு தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பால், லைப் ஜாக்கெட்களை தமிழகம் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள நபர்களுக்கு செப்., இறுதிக்குள் வழங்கப்படும்' என்றார்.

வழக்கு பைசல்

இதை பதிவு செய்த நீதிபதிகள், 'இதில் மேலும் உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை. மீதமுள்ள நபர்களுக்கு லைப் ஜாக்கெட் வழங்குவதை அரசு தரப்பில் உறுதி செய்ய வேண்டும். வழக்கு பைசல் செய்யப்படுகிறது' என, உத்தர விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை