உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசு விருதுகளை குவிக்கும் வேளாண் துறை தமிழக அரசு பெருமிதம்

மத்திய அரசு விருதுகளை குவிக்கும் வேளாண் துறை தமிழக அரசு பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தி.மு.க., ஆட்சியில் வேளாண் துறைக்கு, மத்திய அரசு பல்வேறு விருதுகளை வழங்கி உள்ளது' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.அதன் அறிக்கை:வேளாண் துறை வாயிலாக விவசாயிகளுக்கு, பல சிறப்பு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். இவற்றால் வேளாண் உற்பத்தி பெருகியுள்ளது. தமிழகம் உணவு உற்பத்தியில் முன்னேறியுள்ளது. பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், பயிர் இழப்பால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக, 29.34 லட்சம் விவசாயிகளுக்கு, 5,148 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளில், மழை, வறட்சி உள்ளிட்ட பேரிடர்களால், 19.8 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டன. பயிர் சேதங்களுக்கு, 833 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டதால், 11.95 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றனர். கரும்பு உற்பத்தி ஊக்கத் தொகை மற்றும் சிறப்பு ஊக்கத் தொகையாக, 4.44 லட்சம் விவசாயிகளுக்கு, 624 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. சர்க்கரை ஆலைகளுக்கு வழிவகை கடனாக, 600 கோடி ரூபாயை அரசு வழங்கி உள்ளது. விவசாயிகளுக்கு, 43,390 விவசாய கருவிகள், 335 கோடி ரூபாய் மானியத்தில், வேளாண் பொறியியல் துறை வாயிலாக தரப்பட்டுள்ளன. ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு, 73.1 கோடி ரூபாய் மதிப்பில், 1,311 கிணறுகள், மின்சாரம் மற்றும் சோலார் பம்ப் செட்டுகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன.நெல் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்காக, 4.41 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு, 12.9 கோடி ரூபாய் மதிப்பில், துத்தநாகம் சல்பேட் மற்றும் ஜிப்சம் வழங்கப்பட்டுள்ளது. சிறுதானிய பயிர்கள் உற்பத்தியை அதிகரிக்க, 65.2 கோடி ரூபாயில், சிறுதானிய இயக்கம் துவக்கப்பட்டு, 2.29 லட்சம் விவசாயிகள் பயன் பெற்று உள்ளனர். பருப்பு வகைகள் பெருக்கு திட்டத்தின் கீழ், 5.67 லட்சம் விவசாயிகளுக்கு, 138 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டு உள்ளது. எண்ணெய் வித்துக்கள் உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் திட்டம், 83.4 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட்டு, 4.03 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். தென்னை சாகுபடி பரப்பை அதிகரிக்கும் திட்டம், 40.5 கோடி ரூபாயில் துவக்கப்பட்டு, 19,922 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.தி.மு.க., ஆட்சியில், வேளாண் துறை அடைந்து வரும் முன்னேற்றங்களுக்காக, பல்வேறு விருதுகளை, மத்திய அரசு வழங்கி உள்ளது. சென்னை கதீட்ரல் சாலையில், 25 கோடி ரூபாய் செலவில், கலைஞர் நுாற்றாண்டு பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. சீர்மிகு திட்டங்களால், வேளாண்துறை உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, அண்டை மாநிலங்களுக்கும், உணவுப் பொருட்களை வழங்கி, நாட்டின் முன்னணி மாநிலமாக திகழ்கிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை