உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.2,500 தர ரேஷன் ஊழியர்கள் கோரிக்கை

ரூ.2,500 தர ரேஷன் ஊழியர்கள் கோரிக்கை

சென்னை : ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்ததற்காக ஏற்பட்ட கூடுதல் பணிக்காக தினமும் தலா, 500 ரூபாய் வீதம், ஐந்து நாட்களுக்கு, 2,500 ரூபாய் வழங்குமாறு ரேஷன் கடை ஊழியர்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, தமிழக அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க தலைவர் ஜி.ராஜேந்திரன் விடுத்த அறிக்கை:பொங்கல் பரிசு வாங்க எந்த தேதி, நேரத்திற்கு வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய டோக்கனை, கார்டுதாரர் வீடுகளில் வழங்கும் பணியில் இம்மாதம், 7ம் தேதி முதல் ரேஷன் ஊழியர்கள் ஈடுபட்டனர்.பின், ஊழியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கு இடையே கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினர். கரும்பு எடுத்து வர வாகன வாடகை போன்றவற்றை, ஊழியர்கள் தம் சொந்த செலவில் மேற்கொண்டனர். எனவே, ரேஷன் ஊழியர்களுக்கு தினமும் தலா, 500 ரூபாய் என, ஐந்து நாட்களுக்கு 2,500 ரூபாய், தமிழக அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை