உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம் செல்லும்: உச்சநீதிமன்றம்

அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம் செல்லும்: உச்சநீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்ற தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம், அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம் செல்லும் என தீர்ப்பளித்தது.எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்கக்கூடாது என, 2005ல், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்த தொடரப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தில் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இன்று (ஆக.,1) விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''இட ஒதுக்கீட்டின் நோக்கத்தை, உள்ஒதுக்கீடு அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்கிறது. நூற்றாண்டுகளாக ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டு வரும் சமூகங்களுக்கு சம வாய்ப்பை அளிக்க உள் ஒதுக்கீடு வகை செய்கிறது'' எனக் கூறினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n5vyzpgk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனையடுத்து 2005ல் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ''பட்டியலின, பழங்குடியினருக்கான உள் ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும். எனவே, அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம் செல்லும்'' எனத் தீர்ப்பளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Vijayakumar Srinivasan
ஆக 01, 2024 22:27

இதனால் யாருக்கு என்ன பயன்? உள் ஒதுக்கீடு பெற்ற பின்பும் பணம் அரசியல் பின்புலம் மற்றும் பிற தகுதிகள் இருந்தால் வசதிகள் கிடைக்கலாம். எல்லாம் கிடப்பில்தான்


K.SANTHANAM
ஆக 01, 2024 17:09

இதே தீர்ப்பு வன்னிய குல ஷத்திரியர் உள் ஒதுக்கீடு செய்தது பொருந்தும் தானே..


K.SANTHANAM
ஆக 01, 2024 17:07

இதே சட்டம் வன்னியர் குல ஷக்தியின் உள் ஒதுக்கீட்டுக்கு பொருந்தும் தானே..


Sivaprakasam Chinnayan
ஆக 01, 2024 15:04

இங்கே ஒரு கூட்டம் வெட்டி பேச்சு பேசிக்கொண்டு இருக்கிறார்கள்? ஒன்றுமில்லை என்று ஆக்கிவிட்டார்கள். அதாவது வருமானம் வரையறை.இல்லையெனின் ஜெனரல் தான். எவ்வளவோ வன்னியர்கள் இன்னும் அடி மட்டத்தில் ஏய் இருக்கிறார்கள். உள் ஒதுக்கீடு வழக்கில் சாதிவாரி கணக்கெடுப்பு இல்லை என்கிறார்கள். இப்ப மட்டும் தேவை இல்லையா?. நீதிக்கு அளவுகோல் ஒன்றே


ஆரூர் ரங்
ஆக 01, 2024 14:39

வழக்கை வெற்றிகரமாக நடத்தி தீர்ப்பைப் பெற்றுத் தந்தது மோதி தலைமையிலான மத்திய அரசு. முதன்முதலாக ஒரு அருந்ததியருக்கு மத்திய அமைச்சர் பதவியும் அளித்துள்ளது. திராவிட கட்சிகள் வார்த்தை ஜாலம் மட்டுமே செய்கின்றனர்.


Sivaprakasam Chinnayan
ஆக 01, 2024 15:07

அப்படியே வன்னியர்களுக்கும் செய்யலாமே


Velan Iyengaar
ஆக 01, 2024 15:58

எல்லாத்துக்கும் சொந்தம் கொண்டாட வந்துடறானுங்க ....சேகர் நபாடே என்ற தமிழக அரசு வக்கீல் வாதத்தினால் கிடைத்த வெற்றி இது ....சரி மருத்துவ மேல்படிப்புக்கான பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு வழக்கில் மோடி என்ன என்ன மாதிரி வாய்தா வாங்கி அந்த வழக்கை இழுக்கடித்தார் என்றும் சொல்லுங்களேன் ???


ஆரூர் ரங்
ஆக 01, 2024 14:36

இதுவரை இந்த ஒதுக்கீட்டால் நூறு அருந்திய இளைஞர்களுக்கு கூட அரசு வேலை கிடைத்திருப்பதே சந்தேகம்.ஏராள போலி சாதிச் சான்றிதழ் கோல்மால் நடக்கின்றன. அப்படியும் தெலுங்கு பேசும் வந்தேறிகள் என தீய முக ஆட்கள் விமர்சித்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.


Velan Iyengaar
ஆக 01, 2024 16:38

முருகனுக்கும் போலி சான்றிதழ் தானா ??


Velu
ஆக 01, 2024 13:33

வன்னியர்களுக்கு மட்டும் உள்ளிதுகீடு செல்லாது


Velan Iyengaar
ஆக 01, 2024 14:07

சட்டம் போடும்போது தெளிவாக போட்டிருந்தால் வன்னியர்களுக்கு கிடைத்திருக்கும். உள்ள ஒதுக்கீடு கேட்ட கட்சிக்கும் கொடுத்த ஆட்சிக்கும் உள்ளே என்ன டீலிங் என்பது தெரியாதா.. பொட்டி தான் குறி.. ஏமாற்றி வாங்கும் வோட்டு தான் குறி .. இல்லெயெனில் அள்ளித்தெளித்தக்கோலத்தில் அவசரம் அவசரமாக தேர்தல் தேதி அறிவிக்கும் சிலமணிநேரம் முன்னாடி தப்பும்தவறுமா ஒரு ஆணை போடுவார்களா ??


Mr Krish Tamilnadu
ஆக 01, 2024 13:29

சலுகைகள் மூலமே படிப்பு, வேலை வரை செல்பவர்கள் அவர்களின் சமுதாயத்திற்கு உதவியும், அரசுக்கு வருமான வரி செலுத்தி தன்னையும் நாட்டையும் உயர்த்தினால் நல்லது. எம் மி ஸ் நம்பரில் அவர்களின் கல்வி முதல் வேலை வரை பதிவு செய்யப்பட வேண்டும்


GMM
ஆக 01, 2024 13:23

எஸ் சி, எஸ் டி பிரிவில் உள் ஒதுக்கீடு முன்பு செல்லாது. தற்போது செல்லும். தமிழக சட்டத்தை / மத்திய அரசு வாதத்தை அப்படியே உச்ச நீதிமன்றம் ஏற்பது சரியா? பிற பிரிவை ஏன் கணக்கில் எடுக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் வினா எழுப்ப முடியாதா? அரசியல் சாசனத்தில் இடம் இல்லையா? இது போல் பி. சி /எம்.பி.சி. உள் ஒதுக்கீடு அவசியம் என்று ஏன் தோன்றவில்லை.? சாதி இட ஒதுக்கீடு கல்விக்கு மட்டும் கேட்கப்பட்டது. பின் அரசியல், அரசு பணிக்கு விரிவு. எந்த வித guideline வகுக்கவில்லை.ஆனால், ஒன்றுபட்டு திருமணம் புரியாத சாதிகளை ஒன்றிணைத்து SC, ST, BC, MBC பிரிவாக மாற்றப்பட்டது. வாக்கு வங்கி சாதி, சிறுபான்மை வாக்கு வங்கி மதம் 1000 ஆண்டு பலனை 100 ஆண்டில் பெற்றுவிட்டன. மாநில நிர்வாக பொறுப்பு அதிகம் இல்லை. விளம்பரம், பேட்டி, அறிக்கை கண்டு வானளாவிய அதிகாரத்தை நீதிமன்றம் வழங்கி வருகிறது.


Sivagiri
ஆக 01, 2024 12:35

மொத்த லட்சக்கணக்கான ஜனங்களில், பத்து இருபது பேருக்கு மட்டும்தான் அரசு வேலை கிடைக்கும், அதுவும் ஒதுக்கீடு மூலம் விண்ணப்பித்த, குறைந்த பட்ச தகுதியானவர்களுக்கு மட்டுமே, அங்கேயும் காசு துட்டு மணி இருக்கணும்.. எதோ, ஒட்டு மொத்த ஜனங்களுக்கும் வாழ்க்கை ஒளி வீச செய்தது போல விளம்பரம் செய்து, ஓட்டு வேட்டை ஆடும் கட்சிகள் . . .


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி