முழு உற்பத்தி மாநிலமாக மாறிய தமிழகம்
சென்னை:சி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய கவுன்சில் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில், நாடு முழுதும் உள்ள சி.ஐ.ஐ., நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், தமிழக தொழில்துறை அமைச்சர் ராஜா பேசியதாவது: இந்தியாவின் தொழில்மயமான மாநிலமாக இருந்த தமிழகம், தற்போது முழுமையான உற்பத்தி மாநிலமாக மாறியிருக்கிறது. நிலையான முன்னேற்றம் மற்றும் இலக்குகளை அடைய கொள்கை, உள்கட்டமைப்பு, திறமைகளை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழகம், 2030ல், ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அதாவது, 86 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளாதாரமாக உருவெடுக்க, சி.ஐ.ஐ., உடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.