உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுப்ரீம் கோர்ட் அமைத்த குழுவில் தமிழக ஐ.பி.எஸ்.,கள்

சுப்ரீம் கோர்ட் அமைத்த குழுவில் தமிழக ஐ.பி.எஸ்.,கள்

சென்னை: கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்., 27ல், த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையை கண்காணிக்க, உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் சிறப்பு குழுவையும் நியமித்து உள்ளது. இதில், வெளி மாநிலங்களைச் சேர்ந்த, தமிழக கேடர் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இருவர் இடம்பெறுவர் என்றும் கூறியுள்ளது. இந்நிலையில், அஜய் ரஸ்தோகி தலைமையிலான சிறப்பு குழுவில், கூடுதல் டி.ஜி.பி.,க்களான, எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரியும் சோனல் மிஸ்ரா, சி.ஆர்.பி.எப்., எனும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணிபுரியும் சுமித் சரண் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த சுமித் சரண், கோவை போலீஸ் கமிஷனராக பணிபுரிந்தவர். சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சோனல் மிஸ்ரா, ஈரோடு மாவட்ட எஸ்.பி.,யாக பணிபுரிந்தவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை