உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிற மாநிலங்களுக்கு தமிழகம் வழிகாட்டி: அமைச்சர் பெருமிதம்

பிற மாநிலங்களுக்கு தமிழகம் வழிகாட்டி: அமைச்சர் பெருமிதம்

சென்னை:''இந்தியாவில் பிற மாநிலங்களுக்கு எல்லாம் வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் தமிழகம் திகழ்கிறது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின், 'பல்கலை ஆராய்ச்சி நாள் - அறிவேள்வி -- 2025' விழா நேற்று நடந்தது. இதில், மருத்துவ ஆராய்ச்சி புத்தகங்கள் வெளியிடப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு சான்றிதழ்கள், விருதுகளை, அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார். பின், அமைச்சர் பேசியதாவது: தமிழக மக்கள் நல்வாழ்வு துறை, இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு எல்லாம் வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் திகழ்ந்து வருகிறது. பல்கலை ஆராய்ச்சி தின விழாவில், மருத்துவம் மற்றும் பல்வேறு சுகாதார துறைகளின் மாணவர்கள் இணைந்துள்ளது, பல்துறை ஆராய்ச்சியை ஊக்குவிக்கும். மேலும், சிகிச்சை முறைகளில் உள்ள பிரச்னைகளுக்கு நவீன தீர்வுகளை கண்டுபிடிக்க வழிவகுக்கும். இவ்வாறு அவர் பேசினார். பல்கலை துணை வேந்தர் கே.நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை