உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3,000 ரூபாய் பாஸ்டேக் சந்தா முன்னிலை வகிக்கும் தமிழகம்

3,000 ரூபாய் பாஸ்டேக் சந்தா முன்னிலை வகிக்கும் தமிழகம்

புதுடில்லி: அறிமுகமான நான்கு நாட்களில், ஆண்டு பாஸ்டேக் சந்தா திட்டத்தில் இணைவோர் எண்ணிக்கையில், தமிழகம் முன்னிலையில் உள்ளது. நாடு முழுதும் 3,000 ரூபாய் செலுத்தி பெறும் ஆண்டு பாஸ்டேக் சந்தா திட்டம், கடந்த 15ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் இணைவோர், ஓராண்டு வரை அல்லது 200 முறை, இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை டோல்கேட்களை கடந்து செல்ல பயன்படுத்த முடியும். இத்திட்டத்தில், கடந்த நான்கு நாட்களில், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். இதில், அதிகபட்சமாக 1.50 லட்சம் சந்தாதாரர்களுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஒரு லட்சம் சந்தாதாரர்களுடன் கர்நாடகா இரண்டாவது இடத்திலும், ஹரியானா மூன்றாவது இடத்திலும் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mahendran Puru
ஆக 20, 2025 06:35

உபி மபி பிகாரில் டோல் காட்டாமல் அடாவடியாய் போவான். அதுதான் லிஸ்டில் வரவில்லை. தென் மாநிலங்கள் மட்டுமே டோல் கட்டுகிறது. பாஜக வாழ்க.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 20, 2025 10:02

தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் நாட்டிலேயே முதல் மாநிலம் என்று பெருமையாக சொல்லிக் கொண்டு உள்ளார். பொருளாதாரத்தில் முன்னனி வகிக்க வேண்டும் என்றால் போக்குவரத்து வசதிகள் நன்றாக இருக்க வேண்டும். ஆனால் உங்கள் கருத்து முதலமைச்சர் கருத்திற்கு எதிராக உள்ளதே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை