உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டில்லி ஒப்புதலுக்கு காத்திருக்கும் தமிழக மெட்ரோ ரயில் திட்டங்கள்

டில்லி ஒப்புதலுக்கு காத்திருக்கும் தமிழக மெட்ரோ ரயில் திட்டங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் உட்பட, ஆறு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு, மத்திய அரசு ஒப்புதல் கிடைக்காததால், அடுத்தகட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சென்னையில் தற்போது, இரண்டு வழித்தடங்களில், 54 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக, மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து, விமான நிலையம் - கிளாம்பாக்கம், கோயம்பேடு - ஆவடி - பட்டாபிராம், பூந்தமல்லி - பரந்துார்; மதுரை திருமங்கலம் - ஒத்தக்கடை; கோவை அவிநாசி சாலை - கருமத்தம்பட்டி, உக்கடம் - சத்தியமங்கலம் என, மெட்ரோ ரயில் திட்டங்களை செயல் படுத்த, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் எந்த ஒரு திட்டத்துக்கும், மத்திய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால், மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னை புறநகரை இணைக்கும் விமானம் நிலையம் - கிளாம்பாக்கம் உட்பட மூன்று மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும், மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும் தமிழக அரசின் ஒப்புதலை பெற்று, மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம். ஓராண்டுக்கு மேல் ஆகியும், மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை. அதன் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே, மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான கடன் வசதி அல்லது நிதி உதவியை பெற முடியும். தற்போது, நிலம் கையகப்படுத்தும் பணியை மட்டுமே மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

BBADRINARAYANAN
ஆக 30, 2025 20:58

Speedy funded to madurai and coimbatore metro project by central government we are early awaiting these projects


Ivan Andrew
ஆக 30, 2025 00:47

ஆக மொத்தத்துல திருச்சில மெட்ரோ கட்டுறதுக்கு DMK 200 வருஷம் ஆக்குவாங்க , திருச்சி மக்கள்லாம் பார்த்தா எப்படி தெரியுது ? திருச்சிக்கும் மெட்ரோ வரணும்


Vignesh Sivaram A G
ஆக 29, 2025 21:11

திட்டங்கள் சரியோ தவறோ.. இப்போ மத்திய அரசு இதுக்கு ஒப்புதல் தரவில்லை என்றால் திமுக நல்லா பிரச்சாரம் பண்ணலாம்.. ஒப்புதல் தந்தால் திட்டம் ஆரம்பித்த திமுகவிற்கு தான் கிரேடிட் பிழைக்கதெரியாத தோற்று போய் ஏமாளியாக நிப்பது பாஜக-ஆதிமுக கூட்டணி..


Mahendran Puru
ஆக 29, 2025 19:30

இந்த மோசடி அரசு தமிழகத்திற்கு எந்த நல்ல திட்டமும் செயல்படுத்த ஒப்புதல் அளிக்காது. ஆனால் பல்லாயிரம் கோடி நிதி உதவி செய்ததாக அடுத்த மாநிலம் மூலமாக எம் பி ஆன மந்திரிகள் கூசாமல் பேசுவார்கள். இவர்கள் அடுத்த முறை சோற்றில் கை வைக்கும்போது நினைத்துப் பார்க்க வேண்டும், தம் தாய் தமிழ்நாட்டிற்கு நிஜமாக என்ன செய்துள்ளார்கள் என்று.


Yasararafath
ஆக 29, 2025 11:47

தமிழக அரசு ஏன் காத்து கொண்டு இருக்கிறது.


Raajanna
ஆக 29, 2025 11:30

மத்திய மாநில ஆட்சியர்கள் கொள்ளையடிப்பதிலே குறியாயுள்ளதால் எவ்வித நல்ல பெரிய திட்டங்களும் செயலற்றுள்ளன. சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகள் கடந்தும் மகா பரிதாபம். அருகில் உள்ள சீனாவின் அபார வளர்ச்சியைக்கூட கவனியாமல் ஜாதிமத ஊழலில் உலகில் முன்னனி தேசமாக உள்ளது.


Seyed Omer
ஆக 29, 2025 11:20

முன்னாள் அமைச்சர் லல்லு பிரசாத் அறிவித்த சென்னை கண்ணியாகுமரிக்கு இரட்டை வழிப்பாதை ரயில் பாதை எப்போது முடிவு பெறும் மேலும் சென்னை கிழக்கு கடற்கரை சாலை மகாபலிபுரம் பாண்டிச்சேரி காரைக்கால் பட்டுக்கோட்டை கீழக்கரை ராமநாதபுரம் சாயல்குடி தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் திருசெந்தூர் உடன்குடி திசையன்விளை வழியாக கண்ணியாகுமரிக்கு ரயில் பாதை எப்போது அமைக்கப்படும் மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் வழியாக திருசெந்தூருக்கு ரயில் பாதை எப்போது அமைக்கப்படும் ஆன்மீக தலமான திருசெந்தூருக்கு ஒரே ஒரு ரயில் சேவை மட்டுமே நடைபெற்று வருகிறது எனவே பகல் சேவையாக சென்னை விழுப்புரம் திருச்சி மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் வழியாக திருசெந்தூருக்கு ரயில் சேவை எப்போது விடப்படும் தமிழகத்தின் தென் மாவட்டங்களின் மூலமாக அதிக வருவாயை ஈட்டிதருகிறது ஆனால் ஓரவஞ்சனை செய்கிறது ஒன்றியரசு


நசி
ஆக 29, 2025 08:14

மெட்ரோ ரயில் திட்டங்கள் மத்திய அரசின் கீழ் ரயில்வே திட்டங்கள் அடிப்படையில் செயல்படுத்துவது இன்றியமையாதது ஏனென்றால் 1 நிதி ஆதாரம் பெருமளவு ஜப்பானியப் இருந்து கடனாக பெறபடுகிறது... 2.தமிழகத்தில் பல கட்டுமானங்களுக்கு பெற்ற பெரும் கடன்கள் கடந்த 59 ஆண்டுகளாக அரசியல்வாதிகள் ஊழலில் பெரும் பணக்காரர்கள் ஆகியுள்ளனர்..மக்கள் பல தலைமுறைக்கு இந்த கடன் சுமையை ஏற்க போகின்றனர்.. 3.மெட்ரோ ரயில் தமிழக ஆட்சியாளர்களுக்கு வளைந்து கொடுத்து அவர்களின் ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு ஏற்ப செயல்படுகிறது...வருவாய்த்துறை பணியாளர்கள் தான் நில ஆர்ஜித நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் அவர்களை பற்றி சொல்ல வேண்டாம்... கடைசியாக ரோடு ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் எந்த திட்டமும் நடை படுத்த முடியாது ..தமிழகத்தில் ஆக்கிரமிப்பு ஓரு கட்சியின் அடிப்படை ஆதாரமாக செயல்படும் போது மெட்ரோ ரயில் திட்டங்கள் பயன் அளிக்காது


சமீபத்திய செய்தி