உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசு திட்டங்களுக்கு நேரடி நிதி; ரிசர்வ் வங்கியில் கணக்கு துவக்கிய தமிழகம்

மத்திய அரசு திட்டங்களுக்கு நேரடி நிதி; ரிசர்வ் வங்கியில் கணக்கு துவக்கிய தமிழகம்

மத்திய அரசின் உதவியுடன், மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களுக்கான செலவு தொகையை, நேரடியாக வழங்கும் பணி துவங்கி உள்ளது. இதற்காக தமிழக அரசு, ரிசர்வ் வங்கியில், 92 தனித்தனி கணக்குகளை துவக்கி உள்ளது. ஊரக வளர்ச்சி, மக்கள் நல்வாழ்வு, கல்வி, நகர்ப்புற வளர்ச்சி, சுற்றுச்சூழல் மேம்பாடு, விவசாயம் போன்ற பல துறைகளில், மத்திய அரசு சார்பில் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. இதற்கான நிதியை ஒதுக்கினாலும், அதை பயன்படுத்தி, மாநிலங்களில் நேரடியாக மத்திய அரசால் திட்டப் பணிகளை செயல்படுத்த முடியாது. மாநில அரசுகளே, இந்நிதியை பயன்படுத்தி, வேறு பெயர்கள் சூட்டி திட்டங்களை செயல்படுத்துவது வழக்கம். இதுவரை திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியானது, மாநில அரசு துறைகளுக்கான கருவூல கணக்கில் செலுத்தப்படும். இவ்வாறு பெறப்படும் நிதி, மத்திய அரசின் நோக்கத்தை சரியாக பூர்த்தி செய்கிறதா என்பது கேள்விக்குறியே. சில நேரங்களில், குறிப்பிட்ட திட்டங்களுக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியை, மாநில அரசுகள் வேறு பணிக்கு பயன்படுத்துவதும் உண்டு. இதனால், திட்டத்தின் பயன் மக்களுக்கு கிடைக்காமல் போகிறது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண, புதிய கட்டுப்பாட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, மத்திய அரசு அறிவித்த திட்டங்களுக்கான நிதியை பெற, ரிசர்வ் வங்கியில் மாநில அரசு ஒரு கணக்கு துவக்க வேண்டும். அந்த கணக்கில், சம்பந்தப்பட்ட திட்ட பணியை மேற்கொள்ளும் நிறுவனம் அல்லது நபர்கள் குறித்த விபரங்கள் சேர்க்கப்படும். குறிப்பிட்ட திட்ட பணிகள் முடிந்த விபரத்தை தெரிவிக்கும் போது, ரிசர்வ் வங்கியில் இருந்து, சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது நபர்களுக்கு, மத்திய அரசின் நிதி நேரடியாக சென்று விடும்.

இதுகுறித்து, தமிழக அரசின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

திட்டப்பணிகளுக்கான செலவு தொகையை நேரடியாக வழங்கும் புதிய நடைமுறையை, மத்திய அரசு, 2024 - 25ம் நிதியாண்டில் துவக்கியது. இதில், தமிழகமும் சேர்ந்துள்ளது. அதன்படி, மத்திய அரசு நிதி வழங்கும் திட்டங்களில், தமிழகம் தொடர்புடைய, 96 திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில், 92 திட்டங்களுக்கு கருவூலத்துறை வாயிலாக, ரிசர்வ் வங்கியில் பணம் எடுக்க கணக்கு துவக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 46 திட்டங்களுக்கு நேரடியாக மத்திய அரசு நிதி விடுவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Michael Gregory
செப் 13, 2025 13:39

முதியவர்களுக்கான மருத்துவக்காப்பீடு திட்டம் தமிழ்நாட்டில் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டம் PM-JAY திட்டத்தின்கீழ் வருகிறது. இந்த மருத்துவக்காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் அணைத்து நோய்களுக்கும் மருத்துவ சிகிட்சை அளிக்கப்படுவது இல்லை. இந்தத்திட்டத்தின்கீழ் குறிப்பிடப்பட்ட மருத்துவசிகிட்சைகளுக்கு குறிப்பிடப்பட்ட தொகை மட்டுமே காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கப்படும் மீதமுள்ள தொகையை நோயாளியே செலுத்த வேண்டும். இந்த மருத்துவக்காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் குறிப்பிடப்படாத சிகிட்செய்களுக்கு நோயாளியே பணம் செலுத்தவேண்டும்.


RAMESH KUMAR R V
செப் 13, 2025 13:14

சட்டங்கள் கடுமை ஆக்கவேண்டும்


duruvasar
செப் 13, 2025 11:28

திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடி கொண்டே இருக்குது அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்து கொண்டே இருக்குது திருடராய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது


GoK
செப் 13, 2025 10:28

பிரதமரின் மருத்துவச்செலவுகளுக்கான எழுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு காப்பீட்டு திட்டத்தை இந்த முதல்வன் முடக்கி வைத்திருக்கிறான். இது ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு வருமான கட்டுப்பாடு எதுவில்லாமல் அணைத்து முதியவர்களுக்கும் இது உண்டு. இதைக்கூட அனுமதிக்காமல் முடக்கி இருக்கிறான் இந்த முதல்வன். முதல்வனாம் முதல்வன் அப்பன்பெயரை வைத்து குடும்பம் முழுதும் கொள்ளை அடிக்கிறது திராவிட மாடலாம் மாடல் வயது முதிர்ந்த நோயாளிகளுக்கு உண்டானதைக்கூட விடவில்லை இந்த களவாணி கூட்டம். இந்த மாதிரி செய்தால் கூட போதாது சவுக்கை எடுக்கணும்.


hariharan
செப் 13, 2025 07:45

இனிமே ஆட்டையப்போட முடியாதா?


xyzabc
செப் 13, 2025 07:25

மாடல் ஆட்சியாளர்களுக்கு தர்ம சங்கடம்.


தியாகு
செப் 13, 2025 07:17

கட்டுமர திருட்டு திமுககாரன் அதுக்கும் ஏதாவது ஐடியா வைத்திருப்பான். அதாவது திட்டங்களை நிறைவேற்றும் காண்ட்ராக்ட்காரர்களின் மொத்த ஜாதகமும் அறிவாலயத்திலும் தலைமை குடும்ப கேபினட் கிச்சனிலும் இருக்கும். வங்கி கணக்கில் பணம் விழுந்தவுடன் அவர்களுக்கு பங்கு தராமல் அடுத்த காண்ட்ராக்ட் கிடைக்காது, ஹி....ஹி...ஹி... போவியா அங்கிட்டு.


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 13, 2025 07:05

சம்பந்தப்பட்டவர்கள் நம்ம ஆளுங்கதானப்பு. அப்பிடியே வெளியாள் எவனாவது வந்தாலும் நமக்கு செக்கு குடுத்துட்டுதான் பணத்தை எடுக்கோனும் தெரியுமில்ல. ஏதாவது வில்லங்கம் பன்னாப்ல அப்புறம் ஸ்டேஷன்ல வெச்சு செஞ்சிருவோம்ல. திராவிட மாடல் பத்தி தெரியாதா என்ன? தெரிலனா அப்பாட்ட கேளு.


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
செப் 13, 2025 06:38

இப்படி எல்லாம் செய்தால் மாநிலங்கள் எப்படி பணம் அடிக்கிறது?


V Venkatachalam
செப் 13, 2025 10:00

ஏ ஐ மூளையை விட எங்களுக்கு மூளை ஜாஸ்தி..ஹி.ஹி..எத்தனை தடைகள் வந்தாலும் தடைகளை தாண்டி வெல்வோம். ஓரணியில் டமில் நாடு ஒருத்தன் பின்னால் டமில் நாடு. ஒன்றிய அரசு எது சொன்னாலும் எதிர்ப்பு தெரிவித்து நடைமுறை படுத்த மாட்டோம்ன்னு யாரும் கேக்கப்புடாது. இது கொள்கை சம்பந்தப்பட்டது இல்ல. பணம் சம்பந்தபட்டது. புரிஞ்சா சரி.


சமீபத்திய செய்தி