உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசின் தரவரிசை பட்டியல் 50வது இடத்தில் தமிழக மின்வாரியம்

மத்திய அரசின் தரவரிசை பட்டியல் 50வது இடத்தில் தமிழக மின்வாரியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை,:மத்திய மின்துறை, 2022 - 23ம் நிதியாண்டிற்கான, 53 மின் வினியோக நிறுவனங்களின் நிதிநிலைமை, செயல்திறனை உள்ளடக்கிய தர வரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், தமிழக மின் வாரியம், 50வது இடத்தை பிடித்து, 'சி மைனஸ்' கிரேடில் உள்ளது. நாட்டில், குஜராத், ஆந்திரா உட்பட பல மாநிலங்களில், இரண்டு, மூன்று மின் வினியோக நிறுவனங்கள் உள்ளன. தமிழகத்தில், தமிழக மின் வாரியத்தின் துணை நிறுவனமான மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மட்டுமே அந்த பணிகளை மேற்கொள்கிறது.மத்திய மின்துறை, நாடு முழுதும் உள்ள மின் வினியோக நிறுவனங்களின் நிதி நிலைமை, செயல்திறன் போன்றவற்றை ஆராய்ந்து, ஆண்டுதோறும் தரவரிசை வெளியிடுகிறது.அதன்படி, 2022 - 23ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அந்த பட்டியலில், தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், 50வது இடத்தை பிடித்து, 'சி மைனஸ்' கிரேடில் உள்ளது.இதற்கு அதன், மின்சார விற்பனைக்கும், வருவாய்க்கும் உள்ள இடைவெளி, 1.06 ரூபாயாக இருந்துள்ளது. மேலும், மின்கட்டண வருவாயை தாமதமாக ஈட்டுவது, மின் கொள்முதலுக்கு அதிகம் செலவு செய்வது உள்ளிட்டவை காரணங்களாக கூறப்பட்டுள்ளன.தரவரிசை பட்டியலில், மஹாராஷ்டிர மாநிலத்தில் தனியார் துறையான, அதானி எலக்ட்ரிசிட்டி மும்பை முதலிடத்தில் உள்ளது. குஜராத்தில் உள்ள டோரன்ட் பவர் சூரத் இரண்டாவது இடத்திலும், டோரன்ட் பவர் ஆமதாபாத் மூன்றாவது இடத்திலும் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை