உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆகாயத்தாமரையில் இருந்து உரம் டென்மார்க் உதவி கோரும் தமிழகம்

ஆகாயத்தாமரையில் இருந்து உரம் டென்மார்க் உதவி கோரும் தமிழகம்

சென்னை:ஆகாயத்தாமரையில் உரம் தயாரிப்பது குறித்து, நீர்வளத்துறையினர் தொழில்நுட்ப ஆலோசனையை கேட்டுள்ளனர்.நடப்பாண்டு, காவிரியில் நீரோட்டம் குறைந்துள்ளது. ஆங்காங்கே கலக்கும் கழிவுநீரில் ஆகாயத்தாமரை வளர்ந்து வருகிறது. இதன் காரணமாக, உள்ளாட்சி அமைப்புகளால் எடுக்கப்படும் ஆழ்துளைகுழாய் நீரில், துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தங்கமணி, சட்டசபையில் கேள்வி எழுப்பினார். ஆகாயத்தாமரையை அகற்ற, சிறப்பு திட்டத்தை கொண்டு வர வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், 'சமீபத்தில் நான் டென்மார்க், நார்வே நாடுகளுக்கு சென்று வந்தேன். 'அங்கு, நீர்நிலைகளில் உள்ள ஆகாயத்தாமரையை உரமாக மாற்றி, பயன்படுத்துவதாக கூறினர். அதை, தமிழகத்தில் செயல்படுத்த அறிக்கை கேட்டுள்ளோம். எனவே, ஆகாயத்தாமரையை அகற்றுவது மட்டுமல்ல; அதை நல்ல உரமாக்கும் திட்டத்தையும் அரசு பரிசீலிக்கும்' என்றார். இத்திட்டத்திற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை, டென்மார்க் மற்றும் நார்வே நாட்டு வல்லுனர்களிடம், நீர்வளத்துறை கோரியுள்ளது. நீர்வளத்துறை பொறியாளர் குழுவினர், அந்நாடுகளுக்கு செல்லவும், அரசிடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி