உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காப்புரிமை பெற விண்ணப்பம் பதிவதில் தமிழகம் முதலிடம்

காப்புரிமை பெற விண்ணப்பம் பதிவதில் தமிழகம் முதலிடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில், 'ஸ்டார்ட் அப்' எனப்படும், புத்தொழில் நிறுவனங்கள் அதிகம் துவக்கப்படுவதால், 2022 - 23ல், இந்திய அறிவுசார் சொத்துரிமை அமைப்பிடம், காப்புரிமை பதிவுக்கு விண்ணப்பம் செய்ததில், 7,686 பதிவுடன், நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.தமிழகத்தில், 2021ல், 2,300 ஆக இருந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எண்ணிக்கை, தற்போது, 7,600ஆக உயர்ந்துள்ளது.அதற்கு ஏற்ப, இந்திய அறிவுசார் சொத்துரிமை அமைப்பிடம், புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை பெறுவதும் அதிகரித்து வருகிறது. 2022 - 23ல் நாடு முழுதும் காப்புரிமைக்கு, 82,811 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. அதில், 7,686 பதிவுகளுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.மஹாராஷ்டிரா, 5,626 பதிவுடன் இரண்டாவது இடத்திலும்; உபி., 5,564 பதிவுடன் மூன்று; கர்நாடகா, 5,408 பதிவுடன் நான்கு; பஞ்சாப், 3,405 பதிவுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. தமிழகத்தில், 2021 - 22ல், 5,263 விண்ணப்பம் பதிவாகி இருந்தது.இதுகுறித்து, இந்திய அறிவுசார் சொத்துரிமை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஒரு விண்ணப்பம், பல கட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, காப்புரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி கிடைக்க ஓராண்டுக்கு மேலாகலாம்.எனவே, ஒருவர் தன் கண்டுபிடிப்பு, தயாரிப்புக்கு காப்புரிமை பெற விண்ணப்பிப்பதே, அது தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்று கருத வேண்டும்.மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் தான் காப்புரிமைக்கு அதிக விண்ணப்பங்கள் வருகின்றன.அவை, பரிசீலிக்கப்பட்டு காப்புரிமை வழங்கப்படுகிறது. மருந்து, வேளாண், அழகு சாதன பொருட்கள் என, பல்வேறு துறை தயாரிப்புகளுக்கு விண்ணப்பங்கள் அதிகம் வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

RAMAKRISHNAN NATESAN
பிப் 23, 2024 13:23

அறிவுசார் சொத்துரிமை ....... இதைப்பெறுவதில் ஆரியர்களின் அறிவியல், கலாச்சார, மருத்துவ, கல்வி ஆகிய துறைகளின் தொடர்பு இருக்கக் கூடாது ...... திராவிடியால்ஸ் ன் முழு அறிவுசார் சொத்துரிமையாக இருக்க வேண்டும் ......


V GOPALAN
பிப் 23, 2024 10:49

We are capable for applying for record sake and for publicity by DMK IT wing


Svs Yaadum oore
பிப் 23, 2024 08:22

ஐ ஐ டி சென்னையில் அனைத்தும் ஆந்திர தெலுங்கானா மாணவர்கள்தான் எப்போதும்.. அதற்கும் இங்குள்ள விடியல் திராவிடனுங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. 2024 IIT Main தேர்வில் முதல் மதிப்பெண் வாங்கிய மாணவர்கள் தெலுங்கானா ஏழு மாணவர்கள் ஆந்திர ராஜஸ்தான் மகாராஷ்டிரா மூன்று மாணவர்கள் டெல்லி இரெண்டு ஹரியானா இரெண்டு மாணவர்கள் தமிழ் நாட்டிலிருந்து ஒரே ஒரு மாணவர்தான் ..இதுக்கும் சமூக நீதி விடியல் திராவிடனுங்க ஸ்டிக்கர் ஓட்டிடுவானுங்க .....


raja
பிப் 23, 2024 07:38

ஐ ஐ டி சென்னை இந்தியாவில் அதிக காப்புரிமை பதிந்தது என்பது நேற்றைய செய்தியாக வந்ததே... அப்படி என்றால் தமிழகம் தானே முதலிடம்... ஆனா பாருங்க இதுக்கும் ஒன்கொள் திருட்டு கோவால் புற திராவிடன் தன்னால் தான் என்று ஸ்டிக்கர் ஒட்டுவான்...


R Kay
பிப் 23, 2024 07:17

காப்புரிமைக்கும் ஸ்டார்ட்டப்பிற்கும் சம்பந்தம் இல்லை. காப்புரிமை பெற்ற நிரூபிக்கப்பட்ட யோசனைகளை established industries கூட வாங்கி நடைமுறை படுத்தி வணிக ரீதியாக விற்பதுண்டு


மேலும் செய்திகள்