உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக வெற்றிக்கழக மாநாடு: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

தமிழக வெற்றிக்கழக மாநாடு: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விக்கிரவாண்டி: இன்று நவக்கும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டையொட்டி, விக்கிரவாண்டியில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் த.வெ.க., மாநில மாநாடு இன்று மாலை நடக்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ceok6nx7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இடையூறு இன்றி

மாநாட்டிற்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் வருவர் என, கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். இதையடுத்து, போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேசிய நெடுஞ்சாலையோரம் நடைபெறும் மாநாட்டிற்கு வந்து செல்லும் வாகனங்கள் இடையூறு இன்றி பயணிக்க, இன்று பிற்பகல் 2:00 மணி முதல் போக்குவரத்தில் போலீசார் மாற்றம் செய்துள்ளனர்.அதன்படி, மாநாட்டிற்கு வரும் பதிவு செய்துள்ள வாகனங்களைத் தவிர, சென்னையில் இருந்து திருச்சி மார்க்கம் செல்லும் பிற வாகனங்கள் திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக விழுப்புரம் நோக்கிச் செல்ல வேண்டும்.சென்னையில் இருந்து கும்பகோணம் மார்க்கம் செல்லும் பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் திண்டிவனத்தில் இருந்து, புதுச்சேரி - கடலுார், வடலுார் வழியாகவும்; இலகுரக வாகனங்கள் திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டில் இருந்து திருவக்கரை, திருக்கனுார், மதகடிப்பட்டு வழியாக விழுப்புரம் நோக்கிச் செல்ல வேண்டும்.

திருப்பி விடப்படும்

திருச்சி மார்க்கத்தில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் விழுப்புரத்தில் இருந்து செஞ்சி, திண்டிவனம் வழியாகவும், கும்பகோணம் மார்க்கத்தில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் பண்ருட்டி, கடலுார், புதுச்சேரி, திண்டிவனம் வழியாக திருப்பி விடப்படும் என போலீசார் தெரிவித்தனர்.போலீசார் கூறியதாவது:பெரிய அளவிலான மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காகவே மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

இறைவி
அக் 27, 2024 10:29

இந்த அரசியல் வியாதிகளின் மானாட்டிற்காக எதற்கு ஒன்றும் அறியாத பொது மக்கள் ஊரைச் சுற்றிக்கொண்டு பயணம் செய்ய வேண்டும். அவரவர் தீபாவளிக்கும் சொந்த மற்றும் அலுவலக வேலையாக செல்பவர்கள் தேவை இன்றி எதற்காக அதிக தூரம் எரிபொருள் செலவழித்து வாகனம் ஓட்டி கஷ்டப்பட வேண்டும். இந்த கட்சிகள் அந்த தொகையை ஈடு கட்டுமா? ஊடகங்களின் ஊடுருவல் அதிகரித்துள்ள இந்த காலத்தில் இவர்கள் சொல்ல விரும்புவதை ஊடகங்கள் மூலம் விளக்கமாக சொல்லி விட்டுப் போகலாமே. என்று இந்த தமிழ் மக்கள் இந்த பளபளப்பு மிகுந்து பொய் அரசியலில் இருந்து வெளி வரப் போகிறார்கள். அறுபதில் பிடித்த சனியன் அறுபது ஆண்டுகள் கடந்தும் இன்னும் நம்மை விடவில்லை. பாரதத் தாயும் தமிழ்த் தாயும் நம்மை காக்கட்டும்.


Venkateswaran Rajaram
அக் 27, 2024 09:38

விஜய் க்கு ஆதரவு உண்டு ...ஆனால் இவர் நீட் க்கு புரியாமல் எதிததைத்தான் ...இவ்வளவு புத்திசாலியாக இருந்தும் எப்படி எதித்தார் என்று தெரியவில்லை


Venkateswaran Rajaram
அக் 27, 2024 09:32

இவர்கள் போக்குவரத்து மாற்றம் செய்வதே மாநாட்டுக்கு வருபவர்களை தடுப்பதற்கு என்று சந்தேகம் வருகிறது ..சரியான விபரம் இல்லை என்று கூறி திருப்பி அனுப்பிவிடுவார்கள் ...போ .மாற்றம் இல்லை எனில் வேறு எப்படியாவது மாநாட்டிற்கு சென்று விடுவார்கள் என்று திருட்டு கழகம் செய்யும் விங்ஞான ரீதியான வேலை


வைகுண்டேஸ்வரன்
அக் 27, 2024 08:59

ஒன்றுமே இல்லாத விஷயங்களுக்கு இத்தனை பக்கம் ஒதுக்கும் நிலை ஏன்? சீமான், விஜய் மாநாடு மாதிரி விஷயங்களில் எதுக்கு இவ்ளோ பில்டப்?? இனி விஜய் பல் தேச்சுட்டார். குளிக்கறார். மஞ்சள் சட்டை, கருப்பு பேண்ட் போடுவார் தோசை சாப்பிடுவார் என்று அப்டேட்ஸ் போடுங்க


VENKATASUBRAMANIAN
அக் 27, 2024 07:59

இப்பவே துண்டு போட்டு வைத்துக்கொள்ளலாம். இதுதான் திராவிட மாடல்


Amar Akbar Antony
அக் 27, 2024 07:22

மன்னராட்சியை தகர்க்க தளபதி புரட்சி செய்ய தீர்மானித்துள்ளார் குறைந்தபட்சம் மன்னர் குடும்பத்திற்கு ஒரு பயம் வரவேண்டும் வாழ்க வளமுடன்


Kasimani Baskaran
அக் 27, 2024 07:15

கூத்தாடிகளுக்கும், வசனம் எழுதுபவர்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை காமராசர் போன்ற நன்னெறியாளர்களுக்கும், செயல்வீரர்களுக்கும் கொடுத்திருந்தால் இந்தியா என்றோ சுபிட்சம் அடைந்திருக்கும். வல்லரசும் ஆகியிருக்கும்.


Ms Mahadevan Mahadevan
அக் 27, 2024 06:50

தினமலர் தான் விஜய் மாநாட்டை அதிகம் பில்ட் அப் செய்கிறது என்று தருகிறது.


Prem
அக் 27, 2024 06:27

தோல்விக் கழகம் வெற்றியடைய வாழ்த்துக்கள்