உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டில்லி படையெடுப்புக்கு தமிழகம் அஞ்சாது: மா.செ.,க்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

டில்லி படையெடுப்புக்கு தமிழகம் அஞ்சாது: மா.செ.,க்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ஓட்டுச்சாவடி வாரியாக கவனித்துக் கொண்டிருக்கிறேன். ஒரே ஒருத்தர் தவறுதலாக விடுபட்டு இருந்தாலும், அவரின் பெயரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார். தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் 15 சதவீத வாக்காளர்களை, அதாவது 97 லட்சம் வாக்காளர்களை நீக்கி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இடம் பெயர்ந்தவர்கள் என, 66 லட்சம் பேரை நீக்கி இருக்கின்றனர். சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை ஆரம்பித்தபோதே, இது, பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்; தகுதியான தமிழக வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று, முன்கூட்டியே எச்சரித்தோம். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறோம். அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் களத்துக்கே வரவில்லை; துரும்பை கூட கிள்ளிப் போடவில்லை. அதனால்தான், நாம் சந்தேகப்பட வேண்டியதாக உள்ளது. எனவே, நீக்கப்பட்ட 97 லட்சம் வாக்காளர்களில், நம் வாக்காளர்கள் இருக்கின்றனரா என்று கவனமாக பார்க்க வேண்டும். ஓட்டுச்சாவடி வாரியாக மைக்ரோலெவல் அளவில் கவனித்துக் கொண்டிருக்கிறேன். ஒரே ஒருத்தர் தவறுதலாக விடுபட்டு இருந்தால் கூட, வாக்காளர் பட்டியலில் அவரின் பெயரையும் சேர்க்க வேண்டும். அதாவது, 168 தொகுதிகளில், 10 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். இதை நாம் ஓட்டுச்சாவடி வாரியாக சரி பார்க்க வேண்டும். உதாரணமாக, கும்மிடிப்பூண்டி தொகுதியின் முதல் ஓட்டுச்சாவடியில், 40 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் நான்கு பேர், ஓரணியில் தமிழகம் முன்னெடுப்பு வாயிலாக சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் இறந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளனர். மற்ற மூன்று பேரை எதற்காக நீக்கியுள்ளனர் என சரி பார்க்க வேண்டும். நாம் இவ்வளவு கவனமாக இருந்தும், ஒரு ஓட்டுச் சாவடியில், 'ஓரணியில் தமிழகம்' கீழ் இணைந்த நான்கு பேர் விடுபட்டிருக்கின்றனர் என்றால், நாம் இன்னும் விழிப்போடு செயல்பட வேண்டும். அடுத்ததாக புதிய வாக்காளர்கள் இணைக்கப்படுவதையும், தொடர்ந்து கவனிக்க வேண்டும். அதேபோல, ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை, 68,470ல் இருந்து 75,032 ஆக அதிகரித்துள்ளது. புதிய ஓட்டுச் சாவடிகளுக்கு, முகவர்களை நியமிக்க வேண்டும். நம்மை நேர்மையாக நேர்வழியில் வீழ்த்த முடியாத, பாசிச சக்திகளும், எதிரிகளும், குறுக்கு வழியில் காரியம் சாதிக்க நினைப்பர். அதற்கு நாம் கடுகளவு கூட இடம் தரக்கூடாது. வெற்றிக் கோட்டை நெருங்கும் நேரத்தில், பதற்றமோ, அசதியோ கூடாது. களத்தில் நாம்தான் வலிமையாக உள்ளோம். நம் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி. வெற்றியை எட்டும் வரை கவனம் சிதறாமல் உழையுங்கள். டில்லி படையெடுப்புக்கு தமிழகம் ஒரு போதும் அஞ்சாது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Perumal Pillai
டிச 22, 2025 14:42

வெள்ளை துணி வீரர்கள் .


V K
டிச 22, 2025 13:13

கோபாலபுர மா மன்னார் ரெண்டாம் தலைவர் டெல்லி மீது படை எடுக்க போகிறார் பார்க் பார்க்


Perumal Pillai
டிச 22, 2025 12:55

1956 - 1967 களில் பேசிய அர்த்தமற்ற வசனங்களை தெலுங்கு பட ரீதியில் இன்னும் பேசி பேசி மக்களை முட்டாள்கள் ஆக்கி வருகிறார்கள் . இது 2025 என சௌகரியமாக மறந்து விடுகிறார்கள் இந்த உன்னதமான அறிவாளிகள் .


Rathna
டிச 22, 2025 11:33

நடவடிக்கைகளை பார்க்கும் போது, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் இவர்களுடன் உறவு கொண்டாடவே விரும்புவதாக தெரிகிறது. அவர்கள் ஆதரித்து, அண்ணாமலை மட்டும் எதிர்த்தால் பயனே இல்லை. பார்லிமென்டிலும் ஆளும் கட்சி தகுந்த பதிலடி கொடுக்க தயாரில்லை. இப்படி பூனையா அல்லது பாலா என்று இருந்தால் பிஜேபி இன்னும் 200 ஆண்டுகள் தமிழகத்தில் வளர வாய்ப்பே இல்லை.


Keshavan.J
டிச 22, 2025 11:13

இவர் பெரிய சோழ மன்னர் டில்லி படையெடுப்பை எதிர் கொள்வராமா . சரியான காமெடி பீஸ்


Madras Madra
டிச 22, 2025 11:06

தில்லி படை வரணுமா ? அண்ணாமலை படையே அதிகம்


Barakat Ali
டிச 22, 2025 10:56

மக்கள் முன்பு தில்லிக்கு எதிராக வீராவேசம் ..... ஆனால் ரகசியமாக தில்லிக்கு காவடி தூக்குவோம் .....


duruvasar
டிச 22, 2025 10:53

ஒரு அட்டைக்கத்தியின் அலம்பல் என்ற அளவில் எடுத்துக்கொள்ள வேண்டியதுதான் .


தஞ்சை மன்னர்
டிச 22, 2025 10:53

"எந்த நேரமும் மத்திய அரசை கேவலமாக" அதே ஒன்றிய அரசு கைக்கூலிகள் வளர்ச்சி பற்றி கேட்டல் நேரு இந்திரா திமுக காந்தி போன்றறை திட்டுவது ஏன்


theruvasagan
டிச 22, 2025 14:10

இந்து மத விரோதம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஊழல் போன்றவற்றில் திளைத்தவர்களுக்கு பாராட்டு பத்திரம் வாசிப்பாங்களா. அது 200 ஓவா வாங்கற கொத்தடிமைகளோட கடமை.


Anand
டிச 22, 2025 10:44

மாறாக நாங்கள் முக்காடு போட்டுக்கொண்டு டெல்லி சென்று ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை