உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாவோஸ் மாநாட்டில் தமிழகத்திற்கு தோல்வி: அன்புமணி குற்றச்சாட்டு

டாவோஸ் மாநாட்டில் தமிழகத்திற்கு தோல்வி: அன்புமணி குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில், தமிழகத்தில் தொழில் துவங்க, எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை' என, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை:சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில், 2025ம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார மாநாடு மூன்று நாட்கள் நடந்தது. இதில், மஹாராஷ்டிரா 15.70 லட்சம் கோடி, தெலுங்கானா 1.79 லட்சம் கோடி ரூபாய், முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.'வளர்ச்சியில் முன்னேறி பாயும் தமிழகம்' என்ற முழக்கத்துடன் பங்கேற்ற, தமிழகத்திற்கு எந்த முதலீடும் கிடைக்கவில்லை. இது, தமிழகத்திற்கு பெரும் தோல்வியாகும்.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு,முதலீடுகளை ஈர்க்கும் திறன், தமிழகத்திற்கு குறைந்து வருகிறது.மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட, தொழில் துவங்குவதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில், கடந்த முறை மூன்றாம் இடத்தில் இருந்த தமிழகம், இம்முறை பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டுள்ளது.ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, முதலீடுகள் குவிவதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்று வருகிறது.கடந்த மூன்றரை ஆண்டுகளில், 10 லட்சம் கோடி ரூபாய்க்கும், கூடுதலான முதலீடுகள் வந்திருப்பதாக, தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், வெள்ளை அறிக்கை வெளியிட மறுக்கிறது.முதல்வர் ஸ்டாலின் துபாய், ஸ்பெயின் சென்ற போது, உறுதி செய்யப்பட்ட தொழில் முதலீடுகளும், இதுவரை வரவில்லை.எனவே, வீண் பேச்சுகளையும், வெட்டி விளம்பரங்களையும் செய்வதை விடுத்து, அதிக அளவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை, தமிழக அரசு எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Shunmugham Selavali
ஜன 25, 2025 18:48

தொழில் வளர்ச்சி வேலைவாய்ப்பு திராவிட மாடலில் இல்லை. இலவசம் கொடுத்து மக்களை கையேந்த வைத்து விளம்பரம் செய்து ஆட்சி தொடர பாடுபடும் அரசு வாழ்க.


raja
ஜன 25, 2025 08:06

தொழில் துவங்க விருப்பப்படும் கம்பனிகளையே தங்களின் குடும்ப சொத்தாக எழுதி தரணும் என்று மிரட்டும் ஒன்கொள் கோவால் புற திருட்டு திராவிட குடும்ப மொள்ள மாறிகள் மோடு முட்டைகள் முடிசவிக்கிகள் இருக்கும் ஊரில் எந்த அறிவாலியாவது தொழில் செய்ய வருவானா...ஆமா அந்த லு லு மார்கெட்டு வந்துடுச்சா....


Laddoo
ஜன 25, 2025 07:52

கொஞ்சம் பொறுங்க தமிழக மக்களே மக்கள் பணத்தை சுரண்டி கொழுத்து கொண்டிருக்கும் த்ரவிஷ் கட்சி தங்களிடமிருக்கும் லட்சகோடிகளை கருப்பு பணத்தை வெளிநாட்டிற்கு அனுப்பி அதை மறுபடியும் வெள்ளை பண முதலீடாக காண்பிப்பார்கள்.


Barakat Ali
ஜன 25, 2025 07:33

திமுக உருப்படியாக எதையும் செய்யவில்லை .... இனி செய்யவும் வாய்ப்பில்லை .....


சுராகோ
ஜன 25, 2025 07:31

வெட்டிப்பேச்சு மற்றும் தற்புகழ்ச்சி அரசு


Kasimani Baskaran
ஜன 25, 2025 07:27

முதலீடு வரவில்லை என்றாலும் பரவாயில்லை - ஆனால் டிஆர்பி ராஜா பிரிவினை வாதம் பேசினார். அன்புமணிக்கு அதற்கு கண்டனம் தெரிவித்து இருக்க வேண்டும். உள்துறையில் அமித்ஷாவை சந்தித்து ஆட்சேப மனு கூட கொடுத்து இருக்கலாம்.


Ray
ஜன 25, 2025 07:21

தமிழகத்துக்கு போனியாகவில்லை என்பதில் பூரித்து புளகாங்கிதம் அடைபவர்தான் தமிழகத்தை ஆளவேண்டுமா? இதுக்கு பேர்தான் பச்சை தேச துரோகம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை