உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பின்னோக்கி செல்கிறது தமிழக வளர்ச்சி

பின்னோக்கி செல்கிறது தமிழக வளர்ச்சி

ஆப்பரேஷன் சிந்துார் வாயிலாக பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதிகளுக்கும் பதிலடி கொடுத்து இருக்கிறோம். அதை கொண்டாடும் வகையில், வீடு தோறும் தேசியக்கொடி ஏந்தி பேரணியாக சென்று கொண்டிருக்கிறோம். முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தின் வளர்ச்சியை நான்காண்டுகளி ல் பின்னோக்கி எடுத்து சென்றிருக்கிறார். தமிழக மக்களின் நலனில் துளியும் அக்கறை காட்டவில்லை. அவருடைய நிர்வாகத் திறமையின்மையால், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்கப் போகிறவர்களுக்கும், புகாருக்கு உள்ளானவர்களுக்கும் பாதுகாப்பில்லை. போலீசாரே எமனாக உள்ளனர். தமிழகத்தில் லஞ்சத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பள்ளி, கல்லூரிகளிலும் போதை மற்றும் மது புழங்குகின்றன. இதனால், இளைய தலைமுறை சீரழிகிறது. - முருகன், மத்திய இணையமைச்சர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

kumarkv
ஆக 10, 2025 15:56

ஏன் திரு. திரு என்றால் திருடனா


V RAMASWAMY
ஆக 10, 2025 09:26

அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நான்கு ஆண்டுகளாக அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.


R.RAMACHANDRAN
ஆக 10, 2025 07:14

மத்தியிலும் ஊழல் மலிந்துள்ளதால் மாநில அரசு இந்திய அரசமைப்புக்கு விரோதமாக செயல்பல்படுவது குறித்து புகார் ஆதார பூர்வமாக தெரிவித்து இந்திய அரசமைப்பு உறுப்பு 355 ல் ஒன்றியத்தின் கடமையாக மாநில அரசுகள் இந்திய அரசமைப்பின் படி ஆட்சி செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்பதை செயல்படுத்தக் கோரினால் அந்த புகார்கள் குற்றவாளிகளுக்கே அனுப்பி புகார் செய்பவர்களை டுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர் மத்திய அரசில் ஊடுருவி உள்ள குற்றவாளிகள்.இப்படிப்பட்ட குற்றவாளிகளால் நாட்டில் பயங்கர வாதம் தீவிரவாதம் வளர்கிறது.வருமுன்னர் காக்கும் பணியை செய்யாமல் தூங்கிக்கொண்டு இருந்துவிட்டு பல உயிர்கள் பலியான பிறகு குற்றவாளிகளை தப்பிக்க விட்டுவிட்டு வாக்கு வங்கிக்காக இராணுவத்தை ஏவி சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியதை வாக்கு வங்கிக்காக பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகின்றனர் மத்தியில் நல்லாட்சி நடத்துவதாக.நாட்டில் ஆண்டாளும் இதே நிலைதான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை