உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளி கல்வி முடிப்பவர்கள் உயர்கல்விக்கு செல்ல வேண்டும்: முதல்வர் விருப்பம்

பள்ளி கல்வி முடிப்பவர்கள் உயர்கல்விக்கு செல்ல வேண்டும்: முதல்வர் விருப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: ‛‛ பள்ளி கல்வியை முடிக்கும் அனைவரும் திசை மாறாமல் உயர்கல்விக்கு செல்ல வேண்டும்'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.தமிழக அரசு பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை பயின்று உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தினை, முதல்வர் ஸ்டாலின் இன்று கோவையில் துவக்கி வைத்தார்.விழாவில் ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்கீழ் நேற்று இரவே வங்கி கணக்கில் ரூ.ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. வரலாற்றில் நம் பெயர் நிலைக்கப் போகும் திட்டமாக தமிழ்ப்புதல்வன் திட்டம் இருக்கும். உயர்கல்வியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, அரசு பள்ளிகளில் மட்டுமல்லாமல், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் படிப்பவர்களுக்கும், 10ம் வகுப்புக்கு பிறகு அரசு ஐடிஐ உள்ளிட்ட தொழிற்கல்வி படிக்கும் மாணவர்கள், உயர்கல்வி பயின்றால் அவர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும்.ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக்கும் நோக்கத்தோடு இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்களுக்கு மட்டும் தான் மாத உதவித்தொகையா? எங்களுக்கு கிடையாதா? என மாணவர்கள் கேட்டனர். இதனை ஏற்று தமிழ்ப்புதல்வன் திட்டம் துவக்கப்பட்டு உள்ளது.ஒரு தந்தையாக, குடும்பத்தில் ஒருவராக இருந்து தமிழ்ப்புதல்வன் திட்டத்தை உருவாக்கி உள்ளேன்.பள்ளி கல்வி முடிக்கும் மாணவர்கள் உயர்கல்வி படித்தே ஆக வேண்டும். ஒரு மாணவர் கூட திசைமாறாமல் உயர்கல்விக்கு செல்ல வேண்டும்என்பதே எனது கனவு. தமிழக அரசின் திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். உங்கள் மேல் நீங்கள் வைத்து இருக்கும் நம்பிக்கையை விட நான் அதிகம் வைத்துள்ளேன்.எப்படிப்பட்ட தடைகளை சந்தித்தாலும் போராட வேண்டும். அப்படி போராடிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அனைவரும் பாராட்டக்கூடிய அளவுக்கு கொடிகட்டி பறந்து வருகிறார். தடைகளை கடந்து வென்று பாராட்டுகளை பெற்றது போல் மாணவர்களும் போராட வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ஆரூர் ரங்
ஆக 09, 2024 15:35

எல்லோரும் பல்லக்கில் ஏறிக் கொண்டால் பல்லக்கை தூக்குவது யார்? உண்மையில் எங்க வீட்டுப் பக்கத்தில் தச்சு வேலை செய்பவர் மாதம் 70000 குக் குறையாமல் சம்பாதிக்கிறார். பிளம்பர், எலக்ட்ரீசியன் பற்றாக்குறை ஆனா இன்னொரு புறம் 9000 ரூபாய்க்காக பீசா டெலிவரி வேலை செய்யும் பிஈ பட்டதாரிகள்.. வளர்ந்த நாடுகளின் அரசுகள்கூட எல்லோரையும் வகைதொகையின்றி பட்டதாரிகளாக்க முயல்வதில்லை. வீண் விரையம்.


Kumar Kumzi
ஆக 09, 2024 14:37

டாஸ்மாக் சரக்குக்கு பத்து ஓவா ஏத்துனா போதும் வந்துரும் இன்னும் மின்சாரம் இருக்கு விடியல் கணக்கு படி எவ்வளோவோ இருக்கு


Ramesh Sargam
ஆக 09, 2024 14:02

திமுகவினர் நடத்தும் பல உயர்கல்வி நிறுவனங்களில் ஆள் சேர்க்க இப்படி ஒரு விருப்பம். முதல்வர் எது சொன்னாலும் அதன்பின் ஒரு சதித்திட்டம் இருக்கும்.


Sastha Subramanian
ஆக 09, 2024 13:28

நல்ல அறிவுரை . மாணவர்கள் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ள அறிவுரை


Kumar Kumzi
ஆக 09, 2024 21:20

ஓசிகோட்டர் கொத்தடிமையின் நன்றி ஹீஹீஹீ


sridhar
ஆக 09, 2024 13:25

பின்ன என்ன பிகினிக்கா போவாங்க …


Raj Kamal
ஆக 09, 2024 14:05

இந்த மொக்க ஜோக்குக்கு நாங்க நாலு நாள் கழிச்சி சிரிக்கிறோம்.


S. Narayanan
ஆக 09, 2024 13:24

உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு உதவி செய்வது போல் வெளி வேஷம் போட்டு திமுக விதவை மற்றும் முதியோர் பென்ஷன் தொகையை நிறுத்தி விட்டார்கள். இது மக்களை ஏமாற்றும் திட்டம். இதை தான் இவ்வளவு நாள் யோசித்து தொடங்கி இருக்கிறார்களா. தமிழ் மக்களுக்கு என்றுமே விடியல் கிடையாது. விதவைகள் முதியவர் வயிற்றில் அடித்தா இதை செயல் படுத்த வேண்டும்


S. Narayanan
ஆக 09, 2024 13:17

ஆம் அப்போது தான் திமுக மந்திரிகள் கட்டிய கல்லூரிகளில் அவர்கள் நிறைய சம்பாதிக்க முடியும்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி