உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆகஸ்ட் முதல் தமிழ் புதல்வன் திட்டம்: முதல்வர் ஸ்டாலின்

ஆகஸ்ட் முதல் தமிழ் புதல்வன் திட்டம்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ''உயர் கல்விக்கு செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, மாதம் 1,000 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கும், 'தமிழ்ப் புதல்வன்' திட்டம், ஆகஸ்டில் அமலுக்கு வரும்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் ஐம்பெரும் விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.

சான்றிதழ்

கடந்த கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், தமிழில் 100க்கு 100 மதிப்பெண் பெற்ற, 43 மாணவ - மாணவியர்; தேசிய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய 67வது விளையாட்டு போட்டிகளில், பதக்கம் வென்ற மாணவ - மாணவியர்; பொதுத்தேர்வுகளில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற, 1,728 பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோரை பாராட்டி, சான்றிதழ்களை முதல்வர் வழங்கினார்.மேலும், அரசு பள்ளி களில், 455.32 கோடி ரூபாய் செலவில், 22,931 திறன்மிகு வகுப்பறைகளை துவக்கி வைத்தார். 79,723 தொடக்க கல்வி ஆசிரியர்கள் ஸ்மார்ட் வகுப்பறைகளை பயன்படுத்தும் வகையில், கையடக்க கணினிகளையும் வழங்கினார்.பின், முதல்வர் பேசியதாவது: பள்ளி மாணவர்களுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. காலை உணவுத் திட்டம், இல்லம் தேடிக்கல்வி, எண்ணும் எழுத்தும், மாணவர் மனசு, நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி, நடமாடும் அறிவியல் ஆய்வகம், கல்வி சுற்றுலா என, திட்டங்கள் நீளுகின்றன. அரசுப் பள்ளி மாணவியர், உயர் கல்வி படிக்கும் போது, மாதம் 1,000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தால், மாணவியர் மகிழ்ச்சியாக உள்ளனர்.

மகிழ்ச்சி

இந்த மகிழ்ச்சி மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில், 'தமிழ்ப் புதல்வன்' திட்டம், ஆகஸ்ட் முதல் நடைமுறைக்கு வர உள்ளது. அரசுப் பள்ளி களில் படித்து, கல்லுாரியில் சேர உள்ள மாணவர்களுக்கு, இந்த உதவித்தொகை கிடைக்கும். முதல் கட்டமாக, 500 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் துவக்கப்பட்டுள்ளன. 22,931 பள்ளிகளில் இந்த வகுப்பறைகள் உருவாக்கப்பட உள்ளன.நிதி நெருக்கடி இருந்தாலும், கல்வித் துறையில் புதுப்புது திட்டங்களை உங்களுக்காகவே துவங்குகிறோம். நீங்கள் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். படிங்க, படிங்க, படித்துக் கொண்டே இருங்கள். கல்வி எனும் நீரோடை தடங்கல் இல்லாமல் பாய்வதற்கு, உங்களுடைய இந்த அரசு முழுமையாக ஆதரவாக நிற்கும்.படிக்காமலும் பெரிய ஆள் ஆகலாம் என்று, யாரோ ஒன்றிரண்டு பேரைப் பார்த்து, தவறான பாதையில் செல்லாமல், கல்விதான் பெருமையான அடையாளம் என, புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் கண் முன், 'புல் ஸ்டாப்' தெரியக்கூடாது; 'கமா' தான் தெரிய வேண்டும். 'கீப் ரன்னிங், கீப் வின்னிங், கீப் ஷைனிங். மேக் தமிழ்நாடு பிரவுட்' . இவ்வாறு அவர் பேசினார்.பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் வரவேற்று பேசினார். அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, சுப்பிரமணியன், மேயர் பிரியா, எம்.பி., தயாநிதி, எம்.எல்.ஏ. பரந்தாமன், பள்ளிக்கல்வி துறை செயலர் குமரகுருபரன், பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி ஆகியோர் பங்கேற்றனர்.

'நீட் மோசடிக்கு முடிவு கட்டுவோம்'

முதல்வர் பேசியதாவது: கல்வி தான் உங்களிடம் திருட முடியாத சொத்து. ஆனால், அதிலும் கூட மோசடி நடப்பதை, நீட் தேர்வு முறைகளில் பார்க்கிறோம். நீட் தேர்வு மோசடியானது என, முதன் முதலில் தமிழகம் தான் கூறியது. அதை இன்று இந்தியாவே சொல்லத் தொடங்கி விட்டது. இந்த மோசடிக்கு ஒரு நாள் முடிவு கட்டுவோம்.மாணவர்கள் படிப்பதற்கு சமூகமோ, பொருளாதாரமோ, அரசியல் சூழலோ எதுவும் தடையாக இருக்கக் கூடாது. அதுதான் என்னுடைய எண்ணம். அதுதான் திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை.இவ்வாறு அவர் பேசினார்.

மேடையில் மாணவி கோரிக்கை

இந்த நிகழ்ச்சியில், தேசிய பள்ளிகள் கூட்டமைப்பு போட்டிகளில், அதிக வெற்றி பெற்றவர்கள் வரிசையில், சென்னை கண்ணகி நகர் அரசு மேல்நிலைப் பள்ளி, 10ம் வகுப்பு மாணவி கார்த்திகா இடம் பெற்றிருந்தார்.இவர் முதல்வரிடம் மேடையில் பரிசு பெறும் போது, கோரிக்கை ஒன்றை வைத்தார். தாங்கள் வசிக்கும் பகுதியில் சரியான விளையாட்டு மைதானம் இல்லை என்றும், அமைத்து தந்தால், இன்னும் பல விளையாட்டு வீரர்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் கூறினார். அவரது கோரிக்கையை ஏற்ற முதல்வர், உடனடியாக அமைச்சர்கள் உதயநிதி, மகேஷ் ஆகியோரிடம் பரிசீலிக்குமாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 63 )

M.S.Jayagopal
ஜூன் 16, 2024 20:06

இவருடைய தந்தைக்கு கூட தோன்றாத திட்டங்கள் இவருக்கு எப்படி தோன்றுகின்றன? ஏன் என்றால் அரசியலில் இப்பொழுது இலவசங்கள் என்று அறிவிப்பது மக்களை ஏமாற்றும் வோட்டு வங்கி திட்டங்கள் என்றாகிவிட்டன. மேலும் அறிவிக்கப்படும் எந்த திட்டங்களும் தொடர்ந்து முறையாக செயல்படுத்தப்படுவது இல்லை.இதனை எதிர்க்கட்சிகளும் வெளிப்படுத்துவது இல்லை.


casbbalchandhar
ஜூன் 17, 2024 12:25

சரியாக சொன்னீர்கள் எல்லாம் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. ஆரம்பம் செய்து அப்படியே விட்டுவிடலாம் யார் இவர்களை கேட்க போறாங்க.


Sainathan Veeraraghavan
ஜூன் 16, 2024 15:35

தமிழ்நாட்டை போண்டியாக்காமல் திமுக விடாது. எதற்கும் லாயக்கில்லாத திமுக அரசு தமிழ்நாட்டிற்கு ஒரு சாபக்கேடு


V GOPALAN
ஜூன் 15, 2024 15:48

When is our Tamil Mudhalvan will rule Tamilnadu. Our stalin is basically telugu base person.


ram
ஜூன் 15, 2024 15:17

விடியா.. நாடகம் ஆரம்பம்....


ஆரூர் ரங்
ஜூன் 15, 2024 14:49

பள்ளிகளிலேயே ன போதுமான கழிவறை, நூலகம், பாதுகாப்பான குடிநீர், ஆங்கில தமிழாசிரியர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. சத்துணவுக் கூடங்களின் தரம் கேள்விகுறி. விளையாட்டு திடல்கள் இருப்பதில்லை. இவற்றை சரி செய்யாமல் வெறுமனே பணம் கொடுப்பது லஞ்சம் கொடுத்து தாஜா செய்ய முயற்சிப்பது போலுள்ளது.


ram
ஜூன் 15, 2024 13:54

வாய் மட்டும்தான் சொல்லும் ஆனால் செயல்லே ஒன்னும் இருக்காது.. காசா பணமா .. அள்ளி விடு மாப்ளே.. பெட்ரோல் ..டீசல்... சமையல் வாயு... என்னமோ அது போலே தானே இதுவும்...


நிர்மலா முனுசுவாமி
ஜூன் 15, 2024 13:34

அரசு பள்ளிகளில் கழிப்பறைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. மாணவ மாணவிகளுக்கு ஆரோக்கிய குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். தயவுசெய்து இது குறித்து நடவடிக்கைகள் எடுக்க பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்


இறைவி
ஜூன் 15, 2024 13:09

முன்பு கழகங்களுக்கு தனியார் மருத்துவ கல்லூரிகள் மூலம் பணம் வந்தது. அதன் மூலம் தேர்தல்களின் போது ஒட்டுக்கு பணம் கொடுக்க முடிந்தது. நீட் வந்து அந்த வழியை அடைத்து விட்டது. வேறு வழிகளில் பணம் பார்க்கலாம் என்றால் அண்ணாமலை தோண்ட ஆரம்பித்து விடுகிறார். அதனால் கட்சியிலிருந்து ஓட்டுக்கு பணம் கொடுத்தது மாறி மக்கள் திட்டம் என்ற பெயரில் அரசு நிதி கொடுக்கப்படுகிறது. மகளிர் உரிமை தொகை, இலவச பஸ், தமிழ் புதல்வன் என்ற பெயரில் தேர்தல் பரப்புரை செய்ய படுகிறது. உண்மையில் அரசுக்கு மாணவர்கள் மேல் அக்கறை இருந்தால் கல்வியை முழுதும், ஜாதி மத வேறுபாடின்றி, இலவசமாக்கலாமே. அவர்களுக்கு ஏட்டு கல்வி மட்டுமின்றி,கை தொழில்கள், சிறு, குரு தொழில்களிலும், பயிற்சி கொடுத்தால், நாடு தானாகவே முன்னேறும். யாரும் அரசு வேலை கிடைக்கவில்லை என்று சோம்பி இருக்க மாட்டார்கள். எல்லாம் தேர்தல் தந்திரங்கள்.


Svs Yaadum oore
ஜூன் 15, 2024 12:28

அ தி மு க கொண்டு வந்த பல திட்டங்களை நிறுத்தி பெயர் மாற்றம் செய்து போலியாக விடியல் நாடகம் ....பள்ளி மாணவருக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் என்ன ஆனது ??......விடியலாக விடிந்தது ....பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம் என்ன ஆனது?? ....எல்லாம் ஏமாற்று வேலை ...


Svs Yaadum oore
ஜூன் 15, 2024 12:24

கல்வியை கொடுக்க எவ்வளவு ஆயிரம் கோடி செலவுகள் செய்தாலும் பாராட்டணுமாம் .....பள்ளி கல்விக்கு மட்டும் அரசு செலவிடும் தொகை வருடம் 35000 கோடிகள் ....அதில் பெரும் பங்கு ஆசிரியர் சம்பளம் .....இந்த அரசு பள்ளி ஆசிரியர்களில் பலர் போஸ்கோ சட்டத்தில் கைதாவது தொடர் கதை ....இதில் மறைக்கப்பட்டது எத்தனை சம்பவங்களோ ...பல அரசு பள்ளி கழிப்பறை கிடையாது வகுப்பறை கிடையாது சுத்தம் பாதுகாப்பு சுகாதாரம் எதுவும் கிடையாது .....சரியான பாட திட்டமும் கிடையாது ...இந்த சமச்சீர் பாடம் வைத்து எந்த போட்டி தேர்வும் எழுத முடியாது ....6000 பணியிடத்திற்கு இங்கு 15 லட்சம் நபர்கள் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதறான் ...இதெல்லாம் சரி செய்ய கேள்வி கேட்க நாதியில்லை ....


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை