உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மொழிபெயர்ப்பில் விழி பிதுங்கும் தமிழ்; கூகுளை நம்பும் அதிகாரிகளால் குழப்பம்!

மொழிபெயர்ப்பில் விழி பிதுங்கும் தமிழ்; கூகுளை நம்பும் அதிகாரிகளால் குழப்பம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக அரசுக்கு சொந்தமான கன்னிமாரா நுாலகத்தை 'கொன்னமர நுாலகம்' என்றும், அதிக தகவல்கள் குவித்துள்ளதை குறிப்பிடும், 'ரிச் ரிப்போசிட்டரி' என்பதை, 'பணக்கார களஞ்சியம்' என்றும் மொழி பெயர்ப்பு செய்து, தமிழக அருங்காட்சியகங்கள் துறை, தன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.தமிழக அரசு அருங்காட்சியகங்கள் துறையின் கீழ், சென்னை, எழும்பூர் அருங்காட்சியகம் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 1851ம் ஆண்டு, பிரிட்டிஷாரால் எழுப்பப்பட்ட இது, நாட்டின் பழமையான அருங்காட்சியகங்களில் இரண்டாவதாக உள்ளது. இங்கு, பழங்கால தென்மாநில மக்களின் கலைகள், வாழ்வியல் முறைகள், தொல்லியல் எச்சங்கள், நாணயங்கள், சிலைகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. தவிர, இதன் வளாகத்தில் புகழ்பெற்ற பொது நுாலகமான கன்னிமாரா நுாலகமும் உள்ளது.புகழ்பெற்ற இந்த அருங்காட்சியகத்திற்கு வந்த, வெளிநாட்டில் வசிக்கும் தமிழ் ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது: எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள சிற்பக்கூடத்துக்கு சென்றிருந்தேன். அவற்றுக்குள் வைக்கப்பட்டிருந்த குறிப்புகளை பார்க்கும்போது தலை சுற்றியது. அதாவது, ஆங்கிலத்தில் உள்ள குறிப்புகளுக்கு தகுந்தாற்போல், தமிழில் மொழிபெயர்க்காமல், 'கூகுள் டிரான்ஸ்லேட்' செய்து, அதை அச்சடித்து வைத்துள்ளனர். அதில் உள்ள எந்த வாக்கியமும் முழுமை பெறவில்லை.தொல்லியல் துறை சார்ந்த தகவல்களையும், வார்த்தைகளையும் பொதுமக்கள் புரிந்துகொள்வது கடினம். அவர்களுக்கு எளிய தமிழில் தகவல்களை தரவேண்டிய அருங்காட்சியகங்கள் துறை, தமிழை குத்தி, குதறி, கொலை செய்து உள்ளது.அதேபோல், அருங்காட்சியங்கள் துறையின், https://chennai.nic.in/tourist-place/government-museum/ என்ற இணையதளத்திலும், தமிழ் பகுதியில், 'ஆட்டோ கூகுள் டிரான்ஸ்லேட்' செய்யப்பட்டுள்ளது.அதில், அனைத்து வகையான அருங்காட்சியக துறைகள் இருப்பதை குறிப்பிடும் வகையில், 'ரிச் ரிப்போசிட்டரி' என்பதை 'பணக்கார களஞ்சியம்' என்றும், கன்னிமாரா நுாலகத்தை, 'கொன்னமர நுாலகம்' என்றும் அப்பட்டமாக, இல்லாத ஒன்றை மொழி பெயர்க்கிறது.இதை படிக்கும் வெளிநாடுவாழ் தமிழர்கள் மட்டுமல்ல, தாய்த்தமிழக மக்களே குழம்புவது நிச்சயம்.தமிழை காப்பதாக சொல்லிக்கொள்ளும் தி.மு.க., அரசு, இதை கவனிக்காதது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Gopalakrishnan Manikandan
நவ 09, 2024 22:30

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பண்ணாட்டு விமான நிலையத்தில் புறப்பாடு முனையத்தில் ஒரு கழிப்பிடத்தில் "மேலெழுந்த வாரியான அறைகூவலர்களுக்கு" என்று எழுதப்பட்டிருந்தது. அது "for physically கண்டிக்காப்பேட்" என்பதன் தமிழாக்கம் என புரிந்துகொள்ள சில நிமிடங்கள் ஆனது. ஆனால், அது புரிந்த பின்பு என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.


Subash BV
நவ 09, 2024 13:56

Politicians not bothered to promote their own languages due to vote bank politics and not ready to convince public, to join their kids in mother tongue media instead of convent schools. Now Modiji is preparing to literatures in local languages for engineering medicine etc. ALREADY HINDI IS IN FULL SWING. We have to wait and watch when the states will effectively promote their languages instead of English. Mothers tongue is the best. PROMOTE WITHOUT ANY SUITCASES POLITICS. PUT THE BHARATH FIRST.


சாண்டில்யன்
நவ 08, 2024 19:59

INTEGRAL COACH FACTORY ICF "ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலை" என்று மொழி பெயர்த்துள்ளது கூகுள் மேப் திருத்த சொன்னால் திருத்துவதில்லை கோச் ரயில் பெட்டி என்பதை கிரிக்கெட் பயிற்சியாளர் கோச் என்று நினைத்துக் கொண்டார்களோ? பயிற்சியாளர்களை உருவாக்க ஏன் தொழிற்சாலை தேவை?


Dharma
நவ 08, 2024 17:40

இதுதான் ர்டிபிசியால் இன்டெலிஜென்ஸ். ஆங்கிலத்தில் நான் தட்டச்சு செய்தது artificial intelligence. அதன் தமிழாக்கம் பார்த்தீர்களா? type என்பது எவ்வாறு வருகிறது பாருங்கள். டிபே. not only google, all english to tamil typing software also like that only.


சமூக நல விருப்பி
நவ 08, 2024 15:03

கூகுளில் எதை கொடுத்தாலும் போட்டு விடுவார்கள். அதனால் தமிழே தெரியாத திராவிட மாடல் ஆட்சியாலருக்கு பைத்தியம் தான் பிடிக்கும்


Radhakrishnan Seetharaman
நவ 08, 2024 14:46

வெளிநாட்டுத் தமிழராதலால் சரியாகக் கண்டுபிடித்து விட்டார். தாய்த்தமிழக மக்களுக்கு அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. சரக்கு, பிரியாணி, 500 ஓவாய் இருந்தால் போதும். ஆட்சியாளர்களுக்கோ, அதிகாரிகளுக்கோ தமிழ்த்தாய் வாழ்த்தைக் கூட பிழையின்றி பாடத் தெரியாது. இது தான் இவர்கள் தமிழ் வளர்த்த லட்சணம்.


Suppan
நவ 08, 2024 13:25

சம்பத்து சார் இதென்ன தமிழய்யா. இப்படியா கொலை செய்ய வேண்டும்?


Ramakrishnan Sathyanarayanan
நவ 08, 2024 13:06

உடனடியாக சரிசெய்ய வேண்டும்


Amar Akbar Antony
நவ 08, 2024 10:53

தமிழே தற்குறி யாருக்கெல்லாமென்றால் கண்டிப்பாக தமிழ் துறையை சார்ந்தவர்கள் காரணம் வேறொன்றுமில்லை தன் குழந்தைகளை ஆங்கிலத்தில் பயில வைப்பதால் இப்படித்தான் இருக்கும் தனிமனிதனின் சுதந்திரமென்று கூறிக்கொண்டு அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் பயில்விப்பதால் வரும் வினைகளே அரசுப்பள்ளிகளில் கண்டிப்பாக அவரவர் பிள்ளைகளை பயிலவைக்க வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தினால் கல்வி வளரும்


ஆரூர் ரங்
நவ 08, 2024 10:40

கொல்முதல்ன்னு உச்சரித்த போதே தமிழ் திணறியது. தமிழ்செல்வன், தமிழரசி, தமிழ்மணி ன்னு பெயர் வைத்திருந்த ஆட்களில் பலருக்கு தமது பெயரையே உச்சரிக்க வரவில்லை. வாயில் நுழையாப் பெயரை ஏன் வைத்துக் கொள்ள வேண்டும்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை