உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழிசைக்கு குளிர் ஜுரம் வரப்போகிறது

தமிழிசைக்கு குளிர் ஜுரம் வரப்போகிறது

'தமிழகத்தை விட்டு பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்படவில்லை என்றால், பின்விளைவுகளை முதல்வர் சந்திக்க நேரிடும்' என்று தமிழிசை கூறியுள்ளார். அப்படியென்றால், அவர் என்ன செய்யப்போகிறார். அவரே துப்பாக்கி ஏந்தப் போகிறாரா?தமிழகம் இனம், மதம், மொழிகளுக்கு அப்பாற்பட்ட பூமி. பயங்கரவாதத்திற்கு, எப்போதும் முதல்வர் துணைபோக மாட்டார்; இரும்புக்கரம் கொண்டு அடக்குவார்.அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில், இதுபோன்ற விஷ விதைகளை விதைக்க முற்படுபவர்களுக்கு, தமிழகம் துளியும் இடம் தராது.இங்கு முஸ்லிம்கள், ஹிந்துக்கள் ஒன்றாக உள்ளனர். இனம், மொழியால் பிளவு ஏற்படுத்தி, தேர்தல் நேரத்தில் குளிர் காயலாம் என்று, முன்னாள் கவர்னர் தமிழிசை நினைக்கிறார். அவருக்குத்தான் குளிர் ஜுரம் வருமே தவிர, வேறு எதுவும் கிடைக்காது.- சேகர்பாபு,தமிழக அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
மே 07, 2025 12:54

சேகர்பாபு என்கிற பெயரை ... பாபு என்று மாற்றவேண்டும். ஏன் என்றால், இந்த பாபு, மிகவும் விசுவாசமாக இருக்கிறார் அந்த கோபாலபுரம் குடும்பத்துக்கு.


Ramesh Sargam
மே 07, 2025 12:52

இரும்புக்கரம் கொண்டு அடக்குவார். இந்த டயலாக்கை இதற்கு முன்பு எப்போதோ கேட்டிருக்கிறேன். ஆம், தமிழகத்தில் உள்ள குண்டர்களை, கொள்ளையர்களை நான் ஸ்டாலின் இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் என்று அன்று சூளுரைத்தார். அடக்கினாரா...?


SAMANIYAN
மே 07, 2025 10:29

அமைதி பூங்காவா?? எது கோவை குண்டு வெடிப்பை சிலிண்டர் வெடிப்பு என்று சொல்லியதால் தமிழ் நாடு அமைதி பூங்கா ஆகிருமா அது சரி ..எத்தனை கொலை கொல்லைகள் ..கோமா ல இருக்கீங்களா கராத்தே பாபு ..


மணி
மே 07, 2025 09:47

இந்த ஈன பிறவிய மத்திய உள்துறை கவனிக்கவும்


veeramani
மே 07, 2025 09:37

தமிழ்நாட்டில் மத தீவிரவாதம் வந்துவிடக்கூடாது என அந்நாள் ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார். தமிழகத்தில் அண்டை நாட்டார்கள் இல்லையென்றால் ஏன் பயப்படவேண்டும். ஆனால் திருப்பூர், கோவை, திருச்சி ஏரியாக்களில் பங்காளதேசிகள், பலபேர் உள்ளனர். இவர்கள் நிச்சயம் வெளியேற்றப்படவேண்டியவர்கள்தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை