உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தோல்வி என்பது நிரந்தரம் அல்ல; தத்துவம் சொல்கிறார் கமல்!

தோல்வி என்பது நிரந்தரம் அல்ல; தத்துவம் சொல்கிறார் கமல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தோல்வி என்பது நிரந்தரம் அல்ல' என மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசினார்.சென்னையில் நடந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2வது பொதுக்குழு கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது: ம.நீ.ம., நிர்வாகிகள் சின்ன சின்ன பதவிகளுக்கு ஆசை கொள்ள வேண்டும். சாதித்து விட்டேன் என்று கூறவில்லை, முடியும் என்று கூறுகிறேன். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பேச்சு ஆபத்தானது என உலகிற்கே தெரியும். ஒரே தேர்தல் நடை பெற்றால் ஒருவருடைய நாமம் மட்டுமே உரைக்கப்படும். தற்போதைய ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல, இனி வருபவர்களுக்கும் எச்சரிக்கை. ஒரே நாடு, ஒரே தேர்தல் செய்து பார்த்த வடுக்கள் ரஷ்யா போன்ற நாடுகளில் உள்ளன.

தோல்வி நிரந்தரம் அல்ல

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இந்தியாவுக்கு தேவையில்லாத ஒன்று. இந்தியாவிலேயே நேர்மையானது தமிழகம் தான். நேர்மையானவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். அதிக வரி கட்டுகிறோம் . இந்த நாட்டை வழி நடத்திக் கொண்டிருப்பது நமது வரி பணம் தான். அதை பகிர்ந்து தர வேண்டும்.மாநிலங்களுக்கான நிதி பகிர்வு நியாயமானதாக இருக்க வேண்டும். வீரமும், நேர்மையும் இருக்கிறதா என என்னையே கேட்டுக் கொண்டவன் நான் . தோல்வி என்பது நிரந்தரமானது அல்ல. அதேபோல், பிரதமர் பதவி என்பதும் நிரந்தரம் அல்ல.

ஜனநாயகம்

நான் நான்கு வயது முதல் மேடையை பார்த்து வருகிறேன். என் வாழ்வோடு இருக்கிறது. அதனால் அரசியலில் இருக்கிறேன். அன்றாட உடல் நலம் பேணுவது போல ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். இந்த பீடம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறிக்கொண்டே இருக்க வேண்டும். தோற்ற அரசியல்வாதியையும் மக்கள் ஞாபகம் வைத்திருப்பார்கள். ஒரு தமிழன் பிரதமராக முடியுமா? அதற்கு நாட்டை தயார்படுத்த வேண்டும்.நான் அரசியலுக்கு வந்தது நமக்கோ, எனக்கோ அல்ல. நாளைக்காக விதை போடுவேன். வேறொருவர் சாப்பிடுவார். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

xyzabc
செப் 23, 2024 04:39

கமல், நீ எத்தனை முறை வெற்றி பெற்று இருக்கிறாய் ?


vijai
செப் 22, 2024 00:09

உனக்கு அடுத்த படம் ஃப்ளாப் ?


vbs manian
செப் 21, 2024 22:26

அந்த ராஜ்யசபா பதவிக்காக இன்னும் என்னவெல்லாம் பேசுவாரு.


HoneyBee
செப் 21, 2024 21:51

யப்பா கண்ணை கட்டுதே. ஜனநாயகம் பற்றி பேசலாமா... பணத்துக்காக சோரம் போன ???


aaruthirumalai
செப் 21, 2024 21:45

எம்பெருமான் திருப்பதி ஏழுமலை வெங்கடாஜலபதி பகவானே லட்டுவால விழிபிதிங்கி உள்ளார். நீ என்னா பிஸ்கோத்து.


Oru Indiyan
செப் 21, 2024 21:19

தமிழர்கள் மட்டுமே நியாயமானவர்கள் என்றால் உங்கள் நண்பர் பிரியாணி விஜயன், ராகுல் காந்தி, அமிதாப் எல்லோருமே நியாயமானவர்கள் இல்லை அதாவது உங்கள் பாஷையில் அவர்கள் திருடர்கள். சரியா கமல்.


vikram
செப் 21, 2024 20:28

உமக்கு இந்தியன் 2 கொடுத்த அடி போதவில்லையா


vijai
செப் 21, 2024 20:25

ராஜ்யசபா எம்பி பதவி பேச வைக்கிறது


R. Seenivasan
செப் 21, 2024 20:09

கமல்ஹாசன் ஒரு தமிழர். அவரை தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து பிரதமர் ஆக்குவோம். பாரதம் மூன்று ஆண்டுகளில் உலகின் முதல் பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாகும். ஏனெனில் அவர் உலக நாயகன்.


Ramesh Sargam
செப் 21, 2024 19:42

திமுகவினர் எழுதி கொடுத்ததை அப்படியே வாந்தி எடுக்கிறார் இந்த கமல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை