உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் ஊழியர்கள் இப்போ ஹேப்பி! தீபாவளி போனசை அறிவித்த தமிழக அரசு

டாஸ்மாக் ஊழியர்கள் இப்போ ஹேப்பி! தீபாவளி போனசை அறிவித்த தமிழக அரசு

சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனசை தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் (அக்.) 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்னும் 10 நாட்களே தீபாவளிக்கு உள்ள நிலையில், பண்டிகையை கொண்டாட அனைவரும் தயாராகி வருகின்றனர். புத்தாடைகள், அலங்காரம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை மக்கள் வாங்கி வருவதால் கடைவீதிகளில் எப்போதும் கூட்டம் காணப்படுகிறது.இந் நிலையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனசை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, குரூப் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், துணை விற்பனையாளர்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும்.தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து, டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிகபட்ச போனசாக ரூ.16,800 வரை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
அக் 21, 2024 19:57

டாஸ்மாக் ஊழியர்களுக்கு விற்பனையை பெருக்க ஊக்க போனஸ். அவர்கள் விற்கும் சரக்கை குடிக்கும் பொதுமக்களுக்கு சரக்கு ஒரு ஊக்க போனஸ்.


வைகுண்டேஸ்வரன்
அக் 21, 2024 18:54

இதில் என்ன செய்தி இருக்கிறது? இந்தியா முழுக்க அனைத்து மாநில அரசுகளும் மது விற்பனை பிசினஸ் செய்கின்றனர். அவற்றில் லட்சக்கணக்கில் ஊழியர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு PF, போனஸ், இன்க்ரிமெண்ட், ப்ரோமோஷன், டிரான்ஸ்பர் எல்லாம் தான் உண்டு. உங்களுக்கு எங்கே எரியுது????


chennai sivakumar
அக் 21, 2024 15:26

அப்போ 10 ரூபாய் என்4ஹா போனஸ் கணக்கில் வருகிறது??


சமீபத்திய செய்தி