| ADDED : ஜன 22, 2025 06:42 PM
தென்காசி: தென்காசி அருகே சட்டவிரோதமாக வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த டாஸ்மாக் செக்யூரிட்டியை போலீசார் கைது செய்தனர். கீழப்பாவூர் அருகே அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையின் செக்யூரிட்டியாக தங்கசாமி, 40, என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், கடையில் மதுபானங்கள் திருடு போவதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதனால், சந்தேகத்தின் பேரில் செக்யூரிட்டி தங்கசாமியின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, போலீசாரையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக, வீட்டில் மதுபாட்டில்களை தங்கசாமி குவித்து வைத்துள்ளார். இதனையடுத்து, சுமார் 942 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.