மேலும் செய்திகள்
புதிய வருமான வரி சட்டம் அதிகாரிகளுக்கு பயிற்சி
18-Nov-2025
புதுடில்லி: வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பான விபரங்களை தங்களது வருமான வரி தாக்கலில் தெரிவிக்காத 25,000 பேருக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் அனுப்ப உள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் தொடர்பாக இவை அனுப்பப்பட உள்ளன. மேலும் தெரிவித்ததாவது: இவர்கள் அனைவரும் அதிக ரிஸ்க் உடையவர்கள் என வகைபடுத்தப்பட்டுள்ளனர். இந்த அதிக ரிஸ்க் உடைய நபர்கள், தகவல்களை தானாகப் பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தத்தின் கீழ், வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அடை யாளம் காணப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக கிட்டத்தட்ட 25,000 பேருக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் அனுப்பி, வரும் டிசம்பர் 31க்குள் திருத்தப்பட்ட வருமான வரி தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தப்படும். தவறும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டாம் கட்டமாக அடுத்த மாதம் நடுப்பகுதியில் இருந்து, மற்றவர்களுக்கும் இந்த நடவடிக்கை விரிவுபடுத்தப்படும். இவ்வாறு தெரிவித்தனர்.
18-Nov-2025