உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வருவாயை குறைத்து வரி ஏய்ப்பு; கோ கலர்ஸ் கடைகளில் ஐ.டி., ரெய்டு

வருவாயை குறைத்து வரி ஏய்ப்பு; கோ கலர்ஸ் கடைகளில் ஐ.டி., ரெய்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பல்வேறு மாநிலங்களில் செயல்படும், 'கோ கலர்ஸ்' நிறுவன ஆயத்த ஆடை விற்பனை கடைகளில், நேற்று வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.'கோ பேஷன் இந்தியா' என்ற நிறுவனம், 'கோ கலர்ஸ்' என்ற பெயரில், ஜவுளி கடைகள் துவங்கி, பெண்களுக்கான பிரத்யேக ஆயத்த ஆடைகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்துக்கு, சென்னை, புனே, பெங்களூரு, டில்லி, கொல்கட்டா, ஹைதராபாத், மும்பை என, 700க்கும் மேற்பட்ட ஷோ ரூம்கள் உள்ளன.தமிழகத்தில் மட்டும், 115க்கும் மேற்பட்ட கடைகள், திருச்சி, கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட, பல நகரங்களில் இயங்குகின்றன. இந்நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக, வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும், தவறான கணக்கு காட்டி லாபத்தை வேறு கணக்கில் மாற்றியதாகவும், வருமான வரித் துறைக்கு புகார் சென்றது.அதன் அடிப்படையில், இந்நிறுவனம் தொடர்புடைய 'கோ கலர்ஸ்' கடைகளில், வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள, அந்நிறுவனத்தின் உரிமையாளர் வீடு, ஆர்.ஏ.புரத்தில் உள்ள முக்கிய பங்குதாரர் வீடு, நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரதான ஷோரூம், வணிக வளாகங்களில் செயல்படும் கடைகளில், 300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை செய்தனர்.நேற்று காலை 10:00 மணி முதல், இரவு வரை, கோவை, ஈரோடு, திருச்சி உட்பட, 30 நகரங்களில், ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. இது குறித்து, வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது: சில இடங்களில் நடந்த சோதனையில், கணக்கில் வராத தங்கம் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை கிடைத்த, 'டிஜிட்டல்' பரிவர்த்தணை கணக்கு விபரத்தின் அடிப் படையில் விசாரணை செய்கிறோம்.வருமான வரி தாக்கலில் போதுமான வருவாய் இல்லை என தெரிவித்து, வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கணக்கில் வராத பணத்தை, 'கிரிப்டோ' கரன்சி களாக மாற்றி இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது. இந்நிறுவனம் தொடர்புடையவர்கள் சிலர், வருவாயை பல்வேறு நிறுவனங்களுக்கு முதலீடாக பயன்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகத்தில், விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

nisar ahmad
அக் 08, 2025 12:56

எவ்வளவு சம்பாரித்தாலும் சனாதன மார்கவாதிகள் வரி ஏய்பதில் வல்லவர்கள்


Rathna
அக் 08, 2025 12:31

ஜைன்கள் கர்மா வினையை நம்புபவர்கள். பேராசை கம்பெனி பங்குதாரர்களுக்கு பங்கு தொகையை தராமல் ஏமாற்றி பல வடநாட்டு நிறுவனங்கள் ஏமாற்றி, தனது செல்வத்தை பெருக்கி கொள்கின்றனர். குஜராத் ராஜஸ்தான், டெல்லி தொழிலதிபர்கள் இந்த ஏமாற்றில் முன்னோடி. ஏமாற்றிய தொகையில் 1000% வரி விதித்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். அதிகாரிகள் கமிஷன் வாங்கி கேஸை உளுத்து போக செய்ய கூடாது.


சுந்தர்
அக் 08, 2025 09:53

நூற்றுக் கணக்கில் இப்படி ஏய்ப்பு செய்பவர்கள் உள்ளனர். தனிமனிதன் திருந்தினால் மட்டுமே உலகம் உருப்படும். அது ரொம்ப கடினம்.


Ramesh Sargam
அக் 08, 2025 09:25

இந்திய மக்கள் தொகையில் வெறும் 10 சதவிகிதம் நபர்கள்தான் வருமானவரி கட்டுவதாக செய்தி. அந்த 10 சதவிகிதத்தில் இப்படி ஒரு சில சதவிகிதம் நபர்கள் ஏமாற்றுகிறார்கள், அதாவது அவர்கள் ஈட்டும் அவ்வளவு பணத்தையும் கணக்கில் காட்டுவதில்லை. வருவாயை குறைத்து வரி ஏய்ப்பு செய்கிறார்கள். மக்கள் இப்படி அரசை ஏமாற்றினால் நாடு எப்படி வளரும்? நாட்டில் வசதிகள் சரியில்லை, அது சரியில்லை, இது சரியில்லை என்று மத்திய அரசின்மீது குற்றம் சாட்டுவதை நிறுத்திவிட்டு, ஒழுங்குமுறையாக நேர்மையாக வருமானவரியை கட்டவேண்டியது மக்களின் பொறுப்பு.


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 08, 2025 10:30

எந்த நடிகரோ அல்லது நடிகையாவது வாங்கும் சம்பளத்துக்கு வருமானவரி கட்டுகின்றனரா? அரசாங்கமும் அவர்களை கண்டிப்பதில்லை. பத்திரிகைகளும் நடிக நடிகைகளை தாங்கு தாங்கு என்று தாங்குகின்றன.


Keshavan.J
அக் 08, 2025 11:35

Only 6.68 per cent of Indias population filed income tax returns in 2023-24 fiscal, Parliament was informed on Tuesday out of this many pay zero amount by cooking up the books


baala
அக் 08, 2025 09:01

திருடர்களுக்கு உடந்தையாக சிலர் வருவார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை