உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவர்கள் தாக்கியதில் ஆசிரியர் படுகாயம்: மது போதையில் அட்டூழியம்

மாணவர்கள் தாக்கியதில் ஆசிரியர் படுகாயம்: மது போதையில் அட்டூழியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிவகாசி: சிவகாசியில் மது போதையில் வந்ததை தட்டிக்கேட்ட ஆசிரியர் மண்டையை மாணவர்கள் உடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் திருத்தங்கல் சீ.ரா. அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் 4 பேர் பள்ளிக்கு தாமதமாக வந்துள்ளனர். அவர்களிடம் ஆசிரியர் சந்திரமூர்த்தி விசாரித்துள்ளார். அப்போது அவர்கள் மீது மது வாடை வந்துள்ளது. மது அருந்தினீர்களா என ஆசிரியர் கேட்டதற்கு அவர்கள் மறுத்தனர். இருப்பினும் சந்தேகம் அடைந்த ஆசிரியர், அவர்களை தலைமை ஆசிரியர் அறைக்கு அழைத்து செல்ல முயன்றார். இதனால், மாணவர்கள் அவரின் மண்டையை உடைத்தனர். இதனையடுத்து சந்திரமூர்த்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.இச்சம்பவம் குறித்து போலீசார் 2 மாணவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

ராமகிருஷ்ணன்
ஜூலை 17, 2025 03:33

விடியாத விடியலின் ஆட்சியில் மாணவர்களுக்கு காலையிலேயே முட்டை, சத்துணவுடன் சரக்கு பாட்டில்கள் தந்துள்ளார்களோ, இதான்டா திராவிட மாடல், புரட்சி


Ramesh Sargam
ஜூலை 16, 2025 22:17

டாஸ்மாக் படுத்தும் பாடு. ஆசிரியருக்கு படுகாயம். முதலில் அந்த மாணவர்களின் பெற்றோர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும். ஆசிரியரை அடித்த மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கப்படவேண்டும். இல்லையென்றால் இவர்களைப்பார்த்து மற்றமானவர்களும் சீரழிந்துபோவார்கள்.


M S RAGHUNATHAN
ஜூலை 16, 2025 21:10

அந்த காலத்தில் பள்ளிகளில் காரிடோர்களில் பானைகளில் அல்லது எவர்சில்வர் அடுக்குகளில் தண்ணீர் வைத்து இருப்பார்கள். நம் திராவிடிய மாடல் ஆட்சியில் மக்கேசு அமைச்சர் அதுபோன்று பள்ளிகளில் சரக்கு வைக்க உடனே உத்தரவிட வேண்டும்.


M S RAGHUNATHAN
ஜூலை 16, 2025 21:03

இதற்கும் யாரும் கருத்து போடக் கூடாது. அன்பில் மக்கேசு ஏரியா இது. மாணவர்கள் உற்சாக பானம் தான் அருந்தி வந்து இருக்கிறார்கள். அரசுக்கு வருமானம் கொடுக்கும் மாணவ செல்வங்களை, மது செல்வங்களை ஆசிரியர் எப்படி கண்டிக்கலாம்.


ஆரூர் ரங்
ஜூலை 16, 2025 21:00

இந்த லட்சணத்தில் தாற்காலிக ஆசிரியர் சங்கம் தங்களை நிரந்தரமாக்க போராட்டம் நடத்துகின்றனர். பாவம்.


உ.பி
ஜூலை 16, 2025 20:56

ஆக...இதுதான் சிறப்பான திராவிட மாடல் ஆட்சி... 2026ல் 200 சீட் வெல்வோம்


Gokul Krishnan
ஜூலை 16, 2025 20:44

இந்த ஆசிரியருக்கு ஒரு சாரி பார்சல் இதை பற்றி எந்த மீடியாவது அக்கா கனிமொழிக்கிட்ட கேள்வி கேட்கணும் அதற்கு அக்கா தலையை ஆட்டி ஆட்டி ஒரு பதில் சொல்லுவார் பாருங்க அங்க தான் நிற்குது திராவிட நாடு


Sivagiri
ஜூலை 16, 2025 20:39

ஏற்கனவே அதே பள்ளியில் , மாணவர்களால் ,- மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமைகள் பல காலமாக நடந்து வருவதாக , பல ஆண்டுகளாக அவ்வப்போது செய்திகள் விடியோக்கள் , பரவி கொண்டிருக்கின்றன , . . அரசு பள்ளிகளில் டாஸ்மாக் சரக்கு , கஞ்சா , சிகரெட் , போதை பொருட்கள் தாராளம் . . மாணவிகளுக்கும் , ஆசிரியர்களுக்கும் , சிறுவர் சிறுமியரை அழைத்து வரும் பெற்றோருக்கும் , பல கொடுமைகள் நடப்பதாக , வீடியோக்களே வருகின்றன , எதையும் கண்டுக்காமல் கண்டிக்காமல் , தனது வியாபாரம் மட்டும் நடந்தால் போதும் என்று தீய மாடல் ஆட்சி போகின்றது . . .


Gurumurthy Kalyanaraman
ஜூலை 16, 2025 20:29

இதெல்லாம் நம்ம மாடல்ல சகஜமப்பா.


தமிழ்வேள்
ஜூலை 16, 2025 20:22

டோப்பப்பா கடை சரக்கின் வீரியம் எப்படி என்பதற்கு சரியான விளம்பரம்.. தெருத்தெருவாக உற்சாக பானக்கடை திறந்தது மட்டுமின்றி புத்திர செல்வத்தின் பவுடரையும் கலக்கி விட்டால் இப்படித்தான்.... அடுத்த முறை பதவி கிடைத்தால் துவக்க பள்ளி அரை டவுசர் பயல்கூட வீரன் சரக்கின் உபயத்தில் இதைவிட அலப்பறை செய்வான் தமிழன்டா...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை