உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள ஆய்வு பணிக்கு அ.தி.மு.க.,வில் குழு; தி.மு.க.,வுடன் போட்டி

கள ஆய்வு பணிக்கு அ.தி.மு.க.,வில் குழு; தி.மு.க.,வுடன் போட்டி

சென்னை: தி.மு.க.,வுக்கு போட்டியாக, அ.தி.மு.க.,விலும் கள ஆய்வு பணிக்கு, 10 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில், தி.மு.க.,வில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் நேரு, வேலு, தங்கம் தென்னரசு மற்றும் அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும், மாவட்ட வாரியாக சென்று, ஆட்சி மற்றும் கட்சி பணிகளை கள ஆய்வு செய்து வருகின்றனர்.அதேபோல், அ.தி.மு.க.,விலும் கள ஆய்வு பணிகளை துவக்க, சென்னையில் நேற்று முன்தினம் நடந்த மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், முன்னாள் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ள 10 பேர் குழுவை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, நேற்று அறிவித்துள்ளார்.முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயகுமார், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி, வரகூர் அருணாச்சலம் ஆகியோர், குழுவில் இடம்பெற்றுள்ளனர்.இந்த குழுவினர், அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று கட்சிப் பணிகளை கள ஆய்வு செய்து, அதன் விபரங்களை அடுத்த மாதம் 7ம் தேதிக்குள் அறிக்கையாக சமர்பிக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Svs Yaadum oore
நவ 08, 2024 06:42

அ.தி.மு.க.,என்ன எப்படி கள ஆய்வு பணிகளை துவக்குவது??....அதற்கு 10 பேர் குழுவாம் ....கடந்த 50 வருடங்களில் 30 வருடங்கள் மேல் ஆட்சி செய்தது மறைந்த எம்ஜிஈயர் மற்றும் அம்மா அவர்கள் ...அவர்கள் செய்த வளர்ச்சி பணிகளை வெட்கமில்லாமல் தி மு க ஸ்டிக்கர் ஒட்டி திராவிட மாடல் என்று விளம்பரம் .... அ தி மு க செய்த வளர்ச்சி பணிகள் அனைத்தும் அரசு குறிப்புக்கள் மற்றும் வலை தளங்களில் இருந்து நீக்கம் ....எம்ஜிஈயர் என்ன செய்தார் என்று தேடினால் எதுவும் தென்படாது ....மறைந்த அம்மா அவர்களை பற்றி மிக மோசம் தரம் தாழ்ந்து எழுதுகிறார்கள் ....இதை எல்லாம் திருப்பி கேள்வி கேட்க அ தி மு க வுக்கு வக்கில்லை ...வாக்கு சதமும் குறைந்து போனது ...இனி குழு அமைத்தது என்ன சாதிக்க முடியும்?? ..


சமீபத்திய செய்தி