UPDATED : ஏப் 27, 2024 02:55 PM | ADDED : ஏப் 27, 2024 01:46 PM
சென்னை: சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கை:ஏப்.,27ம் தேதி முதல் மே 1ம் தேதி வரை
அடுத்த 5 நாட்களில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களில் அதிக பட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 3-5 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 27 -28 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு செந்தாமரை கண்ணன் கூறியுள்ளார்.