உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று முதல் 4 நாட்களுக்கு வெப்பநிலை குறையும்

இன்று முதல் 4 நாட்களுக்கு வெப்பநிலை குறையும்

சென்னை : 'வளிமண்டல சுழற்சி உள்ளிட்ட சில காரணங்களால், தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு, பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை சற்று குறைவாக பதிவாக வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தமிழகத்தில் நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களில், இயல்பை விட, 4 டிகிரி செல்ஷியஸ், பிற மாவட்டங்களில், 2 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் குறைந்துள்ளது.தமிழக பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று முதல் 23ம் தேதி வரை, மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், இன்று முதல் நான்கு நாட்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை ஒட்டியும், சில இடங்களில் இயல்பை விட குறையவும் வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை, 35 டிகிரி செல்ஷியசை ஒட்டியே காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, அதிக பட்சமாக கரூர் மாவட்டத்தில் உள்ள, கரூர் பரமத்தியில், 101 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. அடுத்தபடியாக, சேலம், திருப்பத்துார், வேலுார் நகரங்களில் தலா, 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி