உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 4,000 மெகா வாட் காற்றாலை அமைக்க டெண்டர்

4,000 மெகா வாட் காற்றாலை அமைக்க டெண்டர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக கடற்பகுதியில், 4,000 மெகாவாட் திறனில் காற்றாலை மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு, 'டெண்டர்' கோரிஉள்ளது.தமிழகத்தில் காற்றாலை மின் நிலையம் அமைப்பதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. எனவே, தனியார் நிறுவனங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில், நிலத்தில், 10,000 மெகாவாட் திறனில், காற்றாலை மின் நிலையங்களை அமைத்து உள்ளன.மத்திய அரசு, வெளிநாடுகளில் இருப்பது போல, கடல் பகுதியிலும் காற்றாலை மின் நிலையம் அமைக்க முடிவு செய்துஉள்ளது. இதற்காக, பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், தமிழகத்தை ஒட்டிய கடற்பகுதியில், 35,000 மெகாவாட் திறனில் காற்றாலை மின் நிலையம் அமைக்க, சாதகமான சூழல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் இடையே உள்ள கடலோர பகுதி, கடலில் காற்றாலை மின் நிலையம் அமைக்க அதிக வாய்ப்புள்ள பகுதியாக ஆய்வில் தெரியவந்தது.தமிழக கடலில், 4,000 மெகாவாட் திறனில் காற்றாலை மின் நிலையம் அமைக்க, மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய சூரிய எரிசக்தி கழகம் டெண்டர் கோரி உள்ளது. டெண்டரில் தேர்வாகும் நிறுவனம், கடலில் காற்றாலை மின் நிலையத்தை அமைக்க வேண்டும். அதில், உற்பத்தியாகும் மின்சாரத்தை மின் வாரியம் கொள்முதல் செய்யும்.'கடலில் அமைக்கும் காற்றாலையில், 2,000 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கு தர வேண்டும்' என, மின் வாரியம் ஏற்கனவே மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளது. நிலத்தில் அமைக்கப்படும் காற்றாலையில் மே மாதம் முதல் செப்., வரை மின்சாரம் கிடைக்கும். அதேசமயம், கடலில் அமைக்கும் காற்றாலையில், அதை விட அதிக நாட்களுக்கு மின்சாரம் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Varadarajan Nagarajan
பிப் 04, 2024 18:14

இந்த திட்டத்தை ஆய்வுசெய்து முன்னெடுத்தது மத்திய அரசு. இப்பொழுதுதான் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதில் மாநில அரசு எந்த பங்கையும் வகிக்கவில்லை. ஆனால் அதற்க்கு முன்பே அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் பங்குகேட்டு கோரிக்கை வைத்தாயிற்று. பிறகு இது மாநில உரிமையாக அவதாரம் எடுக்கும்


Ramesh Sargam
பிப் 04, 2024 09:09

கண் கெட்டபிறகு சூரிய நமஸ்காரம்.


Bala
பிப் 04, 2024 08:37

Offshore wind farm requires a different technology & high skill. It's not all that easy, to say that it should have been done earlier. It also has eco impact, which should be studied in detail.


அப்புசாமி
பிப் 04, 2024 08:03

காற்றாலை அமைச்சிட்டு காத்து அடிக்கலேன்னா வாயுபகவானுக்கு 3 பைசா அபராதம். அதிகமா காத்து அடிச்சா அஞ்சு பைசா அபராதம் விதிக்கபடும்.


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 04, 2024 12:11

அபராதத்தை மிரட்டி வசூல் செய்யிறவரு மாவட்ட செயலாளரா இருப்பாருங்கோ.


Ramesh Sargam
பிப் 04, 2024 07:00

முன்னமே செய்திருக்க வேண்டும்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி