உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லேப்டாப் வாங்க டெண்டர்

லேப்டாப் வாங்க டெண்டர்

சென்னை:கல்லுாரி மாணவர்களுக்கு, இரண்டு ஆண்டுகளில், 20 லட்சம் லேப்டாப்கள் வழங்க, அரசின் எல்காட் நிறுவனம் 'டெண்டர்' கோரியுள்ளது.அ.தி.மு.க., ஆட்சியில், பள்ளி மாணவர்களுக்கு, இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டு, 2019ம் ஆண்டு வரை வழங்கப்பட்டது. தி.மு.க., ஆட்சியில் இத்திட்டம் நிறுத்தப்பட்டது. நடப்பாண்டு பட்ஜெட்டில், அடுத்த இரண்டு ஆண்டுகளில், கல்லுாரி மாணவர்களுக்கு, இலவச 'லேப்டாப்' வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, லேப்டாப் கொள்முதல் செய்வதற்காக, தமிழக அரசின் எல்காட் நிறுவனம், சர்வதேச டெண்டர் கோரி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ