உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாத்தூர் அருகே பயங்கர வெடி விபத்து; தொழிலாளர்கள் சிக்கி இருக்கலாம் என அச்சம்

சாத்தூர் அருகே பயங்கர வெடி விபத்து; தொழிலாளர்கள் சிக்கி இருக்கலாம் என அச்சம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று (செப்.,28) பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசு ஆலையில் வட மாநில தொழிலாளர்கள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழ ஒட்டம்பட்டியில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று (செப்.,28) காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசு தொடர்ந்து வெடித்து கொண்டிருப்பதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hfqiipxb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் நீண்ட நேரமாக போராடி வருகின்றனர். ஆலையில் வட மாநில தொழிலாளர்கள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தின் அதிர்வுகள் 15 கி.மீ., தொலைவுக்கு உணரப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.பட்டாசுகளை இறக்கி வைக்கும் போது உராய்வு காரணமாக விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வெடிவிபத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

N.Purushothaman
செப் 28, 2024 14:35

இந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்பட்ட விபத்துக்கள் , உயிரிழப்புக்கள் மிக மிக அதிகம் ....எவ்வளவு விபத்துக்கள் நடந்தாலும் அத பற்றி எல்லாம் கவலைப்படவோ தடுப்பு நடவடிக்கைகள் கண்காணிப்புகள், தயாரிக்கும் முறைகளில் மாறுதல்கள் என எதையும் கண்டு கொள்ளாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கு திருட்டு திராவிட அரசு ...பாதுகாப்பு சாதனங்கள் ,தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு கவசங்கள் அவர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு அளிக்கும் வகையிலான பயிற்சிகள் என எதையும் செய்வதாக தெரியவில்லை .....


அம்பி ஐயர்
செப் 28, 2024 09:44

இத்தனை வருடங்களாக இரு கழகங்களும் மாறி மாறி ஆட்சியில் இருந்து வருகின்றன.... இருந்தும் சிவகாசியில் ஒரு உயர் தர தீவிபத்துக்கான மருத்துவமனை இல்லவே இல்லை.... இது மாதிரி இடங்களில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை கொடுக்க தீ விபத்துக்கான மருத்துவமனை ஒன்று அவசியம் வேண்டும்.... ஆனால் அதற்கு எந்தவித முயற்சியும் எடுப்பதில்லை. மக்கள் தான் பாவம்... இதில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்... அதுவும் வட மாநிலத் தொழிலாளர்கள்.... சும்மாவே நம்ம ஆளுங்களும் அரசும் எதுவும் செய்ய மாட்டாங்க....இவங்க குடும்பத்திற்கு நிச்சயம் எதுவும் கிடைக்காது... கள்ளச் சாராயம் குடித்துச் செத்தால் மட்டும் உடனடியாகப் பத்து இலட்சம்....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை