உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓய்வு பெற்ற எஸ்.ஐ., வெட்டிக் கொலை; இருவர் சரண்

ஓய்வு பெற்ற எஸ்.ஐ., வெட்டிக் கொலை; இருவர் சரண்

திருநெல்வேலி: நெல்லையில், நிலத்தகராறு காரணமாக ஓய்வு பெற்ற எஸ்.ஐ., ஜாகிர் உசேன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், கார்த்திக், அக்பர்ஷா என்ற இருவர் நெல்லை மாவட்ட கோர்ட்டில் சரண் அடைந்தனர். கொலையுண்ட ஜாகிர் உசேன், தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாக கூறி வெளியிட்ட பழைய வீடியோ வைரல் ஆகியுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4nwjoq1b&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திருநெல்வேலி டவுன் தடி வீரன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன், 60. இவர் ஓய்வு பெற்ற எஸ்.ஐ.,. இவருக்கும் இவரது வீட்டின் அருகில் வசிக்கும் மற்றொருவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. திருநெல்வேலி டவுன் காட்சி மண்டபம் தடிவீரன் கோவில் தெருவில் உள்ள மசூதி ஒன்றில் இன்று (மார்ச் 18) காலை தொழுகையை முடித்துவிட்டு வெளியே வந்த ஜாகிர் உசேனை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்துள்ளனர். தலை கழுத்து மற்றும் பல்வேறு பகுதிகளில் அரிவாளால் வெட்டியதால் சம்பவ இடத்திலேயே ஜாகிர் உசேன் பலியானார். சம்பவ இடத்திற்கு விரைந்த திருநெல்வேலி மேற்கு மாவட்ட துணை கமிஷனர் கீதா, உதவி கமிஷனர் அஜித்குமார், டவுன் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் உள்பட உயர் அதிகாரிகள் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சி.சி.டி.வி., காட்சிகளின் அடிப்படையில் போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். முன் விரோதமாக கொலை நடந்துள்ளது என போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில், கார்த்திக், அக்பர்ஷா என்ற இருவர் நெல்லை மாவட்ட கோர்ட்டில் சரண் அடைந்தனர். பழைய வீடியோ வைரல்கொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேன், தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கூறி வெளியிட்ட வீடியோ வைரல் ஆகி வருகிறது. தனக்கு கொலை மிரட்டல் வருவது பற்றி போலீசில் புகார் அளித்துள்ளதாக அவர் வீடியோவில் கூறியுள்ளார். இப்படி முன் கூட்டியே வீடியோவில் புகார் அளித்த நிலையிலும், அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், நெல்லையில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருநெல்வேலி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், உதவி ஆணையாளர் செந்தில்குமார் ஆகிய இருவரும் தான், குற்றவாளிகளை ஊக்குவிப்பதாகவும் அவர் வீடியோவில் குற்றம் சாட்டியுள்ளார்.அண்ணாமலை கண்டனம்பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை:திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன், காலையில் தொழுகை முடித்து வரும் வழியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பணி ஓய்வுக்குப் பிறகு, சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வந்த அவர், வக்பு வாரிய நிலங்களை ஆக்கிரமித்தவர்களை எதிர்த்துக் குரல் கொடுத்ததை அடுத்து, அவருக்குக் கொலை மிரட்டல்கள் இருந்து வந்ததாக, சில நாட்களுக்கு முன் அவர் பேசிய காணொளி வெளியாகியிருக்கிறது. ஒரு ஓய்வு பெற்ற காவல் அதிகாரிக்கே கொலை மிரட்டல் விடுத்து, அவரைப் படுகொலை செய்யுமளவுக்குத் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. சாமானிய மக்களின் புகார்களை போலீசார் கண்டுகொள்வதில்லை. அரசை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மட்டுமே போலீசார் பயன்படுத்தப்படுகின்றனர்.இந்த கையாலாகாத தி.மு.க., அரசால், இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுக்கப் போகிறோம் என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

RaajaRaja Cholan
மார் 18, 2025 20:05

யாரு நீ , உன்னை மாதிரி ஆட்கள் தான் அவ்வாறு யோசிப்பார்கள். ஒரு உயிர் இழப்பு அனைவருக்கும் வருத்தமே , உன்னை மாதிரி திமுக செம்புகள் இதற்கும் மணிப்பூரையும் பிற இடத்தையும் பார்த்து நியாயப்படுத்தும் , நீ எல்லாம் படிக்காத மூடர் கூடம் , உனக்கு திமுக உன்னை காலத்துக்கும் முட்டாளாய் வைத்து கொள்ள செய்யும் ,


Rajathi Rajan
மார் 18, 2025 18:55

ஒரு முஸ்லீம் செத்து போன சந்தோசத்தை மனதின் உள்ளே ஒளித்து வைத்து கிட்டு ஆட்டுக்குட்டி வெளியே ஊளை விடுது?


MUTHU
மார் 18, 2025 19:47

pshycho வா நீ?


என்றும் இந்தியன்
மார் 18, 2025 17:22

காரணம் அறிவாய் காரியத்தின் வீரியம் புரியும் மேலோட்டமாக உள்ளதை வைத்து கொலையின் காரணம் புரியாது


Poovin Kumar
மார் 18, 2025 15:28

உண்மை.ஆனால் அவர் முன்னரே குற்றவாளி யார் என்று கூறிவிட்டார்.வீடியோவும் வெளியிடப்பட்டது பின்னர் எவ்வாறு போலிஸ் அதிகாரிகளுக்கு தெரியவில்லை


KavikumarRam
மார் 18, 2025 15:20

அதுக்குதான் உளவுத்துறைன்னு ஒன்னு இருக்கு. உளவுத்துறை, உள்ளூர் துறை எல்லாம் உங்காட்சில உளுந்துவடை தின்னுட்டு திரிஞ்சா இப்படித்தான் கள்ளச்சாராயம், கஞ்சா கடத்தல், கொலை கொள்ளைனு நடந்துக்கிட்டு இருக்கும். மொத்த போலீஸ் துறையையும் கையில் வைத்திருக்கும் உங்க தத்தி முதலவர் பத்தி இப்படி சொல்ல உனக்கு வெக்கமா இல்ல??? போலீசுக்கு தெரியாம திட்டமிட்ட ஒரு கொலை கூட நடக்காதுங்கிறது கூட தெரியாத முரசொலி தாத்தியா நீ??? ஜெ ஆட்சில இந்த மொத்த போலீசும் சஸ்பெண்ட் ஆகிருப்பாங்க.


MP.K
மார் 18, 2025 13:48

நிலத்தகராறு - கொலை - பேசினால் தீர்க்க முடியாத பிரச்சனைகள் உண்டா


அசோகன்
மார் 18, 2025 12:35

அமைதி மார்கம் கட்டிக்கிட்டாதான் ஆச்சர்யம் வெட்டிக்கிட்டா நார்மல்.......


Ramesh Sargam
மார் 18, 2025 11:56

போலீசார் வலைவீசி தேடுகிறார்கள் கொலையாளிகளை. பிடிபட்டால் என்ன உடனே அவர்களுக்கு தண்டனை கொடுக்குமா நமது நீதிமன்றங்கள். நீதிமான்கள் கண் எதிரிலேயே கொலை நடந்தாலும், அவர்கள் முதலில் கேட்பது சாட்சி. நீதிமன்றமும், உங்களின் சாட்சியும், வெங்காயமும்... கொலையாளிகள் உடனுக்குடன் தண்டிக்கப்படவேண்டுமென்றால், முதலில் ஹைதர் அலி காலத்து சட்டங்களை மாற்றி எழுதவேண்டும். அதுவரையில் கொலை, கொள்ளை, மற்றும் எல்லாவித குற்றங்களும் தொடர்ந்து நடக்கும். வெட்கம் வேதனை.


RAAJ68
மார் 18, 2025 11:25

எதற்கெடுத்தாலும் விடியா ஆட்சி சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பேசுபவர்களுக்கு ஒரு கேள்வி முன் 20 கொலைகளை அரசாங்கம் எப்படி தடுத்து நிறுத்த முடியும். ஒவ்வொருத்தருக்கும் பிரச்சினைகள் உள்ளன எதிரிகள் உள்ளனர் எல்லாவற்றையும் கண்காணிக்க முடியுமா. கொஞ்சம் லாஜிக்கா பேசுங்கள்.


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 18, 2025 15:37

சரியாக சொன்னீர்கள் . இன்று நீங்கள் சொல்லும் லாஜிக்கை 2011 முதல் 2021 வரை நீங்கள் எங்கே தொலைத்தீர்கள்? தெருவில் நடக்கும்போது காலில் முள் குத்தினால் கூட அம்மையாரின் ஆட்சியில் அவலம் என்றுதானே சன் டிவியிலும் கலைஞர் டிவியிலும் புலம்பினீர்கள். சுனாமி வந்தபோது முரசொலியில் அன்றைய முதல்வர் பற்றியும் அவர் சார்ந்த சாதி பற்றியும் என்னெல்லாம் பேசினீர்கள்


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 18, 2025 15:52

சூப்பர் அண்ணா உங்க கருத்து. இதே லாஜிக்கை நீங்க 2011 முதல் 2021 வரை பேசலையே. தெருவுல நடக்கும்போது காலில் முள் குத்தினாக்கூட அம்மையார் ஆட்சி அவலம்ன்னுதானே சன் டிவியிலும் கலைஞர் டிவியிலும் ஒளிபரப்பினீர்கள். சுனாமிக்கு நீங்கள் கூறிய கருத்துக்களை இன்று திரும்ப எடுத்துப்பாருங்கள். குடந்தையில் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்ட போது வெளியான முரசொலி கட்டுரைகளை எடுத்துப் படியுங்கள். முதலில் உங்கள் முகத்தை சரி செய்துகொண்டு பிறகு அடுத்தவர் முதுகு பற்றி கருத்து சொல்லுங்கள் ராஜா


Pandi Muni
மார் 18, 2025 11:22

சொத்தை வாங்கி வஃபு பேருல எழுதாம போனானே


புதிய வீடியோ