உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவர்கள் நாட்டிற்கு சேவை செய்ய உதவும் வகையில் பாட புத்தகங்கள் இருக்கணும்; இஸ்ரோ தலைவர் நாராயணன் வலியுறுத்தல்

மாணவர்கள் நாட்டிற்கு சேவை செய்ய உதவும் வகையில் பாட புத்தகங்கள் இருக்கணும்; இஸ்ரோ தலைவர் நாராயணன் வலியுறுத்தல்

சென்னை: 'அடுத்த பத்து வருடங்களுக்கு மாணவர்கள் திறம்பட படிக்கவும், நாட்டிற்கு சேவை செய்யவும் உதவும் வகையில் பாடப்புத்தகங்கள் வடிவமைக்கப்பட வேண்டும். இதற்கான ஆலோசனை நடந்து வருகிறது' என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.சென்னையில் நிருபர்களிடம் இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது:இந்தியா மற்றும் தமிழகத்தின் அடிப்படைகளை, அதாவது தமிழர்கள் எல்லோருக்கும் ஒரு குணம் உண்டு. விருந்தோம்பல், விட்டுக் கொடுக்கிற மனப்பான்மை, மற்றவர்களை மதிக்கிற மனப்பான்மை, இதையெல்லாம் பாடத்திட்டத்தில் கதை வடிவிலாவது கொண்டு செல்ல வேண்டும். அடுத்த பத்து வருடம் பாட புத்தகங்கள் எப்படி இருக்க வேண்டும். நமது மாணவர்கள் நன்றாக படித்து, நாட்டிற்கு சேவை செய்து, நமது நாட்டை ஒரு வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற வேண்டுமென்றால், எப்படி தமிழகத்தில் உள்ள பாடப் புத்தகங்களில் சிலபஸ் எல்லாம் இருக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பவுண்டேசன் சரியில்லை என்றால், மேலே சென்று எதுவும் செய்ய முடியாது. தொடக்க கல்வியில் இருந்து உயர்கல்வி வரை பாடத்திட்டங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.2047ம் ஆண்டுக்குள் நமது நாடு வளர்ந்த நாடாக மாற வேண்டும். பள்ளிக் கல்வியில் வலுவான அடித்தளம் அமைக்கப்பட வேண்டும். பள்ளிக் கல்வியில், மாணவர்களுக்கு நிறைய அறிவை நாம் உருவாக்க வேண்டும். இது பாடம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சியும் முக்கியம். இந்த அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு, பள்ளிக் கல்வியின் ஒட்டுமொத்த தரத்தை மேம்படுத்துவதில் நிறைய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.இது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கை. நிறைய நிபுணர்கள் அழைக்கப்பட்டு அவர்களின் கருத்துக்கள் கேட்கப்படுகின்றன. எனவே, இது ஒரு சரியான பாடத்திட்டத்தை உருவாக்கு வதற்கும், நமது மாணவர்களுக்கு உதவுவதற்கும், எதிர்கால இந்தியாவிற்கு வலுவான அடித்தளத்தை அமைப்பதற்கும் மிகச் சிறந்த பலனைத் தரும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு நாராயணன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

spr
நவ 24, 2025 20:25

அடுத்த பத்து வருடங்களுக்கு மாணவர்கள் திறம்பட படிக்கவும், நாட்டிற்கு சேவை செய்யவும் உதவும் வகையில் பாடப்புத்தகங்கள் வடிவமைக்கப்பட வேண்டும்." மிகச் சிறப்பான கருத்து பாராட்டலாம் காலத்திற்கேற்றபடி அறிவியல், அன்றாட வாழ்வியல், சட்டம் மற்றும் இந்தியாவின் சிறப்பொருட்கள் மற்றும் கணினி, பயிற்சி ஒழுக்கம், குடியாட்சித் தத்துவம் குறித்த விழிப்புணர்வு இவை நம் பாடத்திட்டத்தில் அவசியம் இருக்க வேண்டும் உண்மையான மதச்சார்பின்மை கற்பிக்கப்பட வேண்டும் பெண்களை மதிக்கக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் ஆனால் இவற்றைச் செய்ய பாடத்திட்டம் படித்தவர்களால், பண்புள்ளவர்களால் உருவாக்கப்பட வேண்டும் அடித்த காற்றில் கோபுரம் ஏறிய எச்சில் இலைகளால் உருவாக்கப்படக் கூடாது கனவுதான் நடக்குமா?


அப்பாவி
நவ 24, 2025 20:09

நல்ல விஷயங்கள் வீட்டில் துவங்கணும். இங்கே எல்லோரும் குறுக்கு வழி.


Rathna
நவ 24, 2025 19:25

65 கால ஆட்சியில், படையெடுத்து நாட்டை நிர்மூலமாக்கியவன், கொள்ளைக்காரன், அரசனில் பெண் பித்தன், அப்பாவி மக்களை படுகொலை செய்தவர்கள், இந்த நாட்டை திருட வந்த ஆங்கிலேயன், துருக்கியன், அரேபியான்களை பிரதானப்படுத்தி பாட திட்டம் இருந்தது. நமது நாட்டின் கலாச்சாரம், மதம், நாகரீகம் பற்றி ஒரு சில பகுதிகளே இருந்தது. இதை மாற்றினால் தான் தேச பக்தி வளரும். ஒழுக்கம் சிறக்கும்.


சூர்யா
நவ 24, 2025 18:59

பிரித்திவி ஏவுகணை பிரித்தி செஹகான் மன்னன் நினைவாக இந்தியாவால் உருவாக்கப் பட்டது. கோரி ஏவுகணை முகம்மது கோரி மன்னன் நினைவாக பாகிஸ்தானால் உருவாக்கப் பட்டது. ஆனால் நாம நம்ம வரலாற்று பாடத் திட்டத்தில் முகம்மது கோரிக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தோம்.


Anand
நவ 24, 2025 18:23

அதாவது, திருட்டு திரவிஷ சித்தாந்தம் இருக்கவே கூடாது...


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 24, 2025 17:57

அப்போ ஈவேரா பற்றியோ, மஞ்சள் துண்டு கொள்ளையரைப் பற்றியோ பாடங்கள் கூடாதா >>>> என்னவொரு வன்மம் >>>>


Rameshmoorthy
நவ 24, 2025 17:48

Also cleanliness , moral classes and respect to others especially women be part of education


rahul
நவ 24, 2025 17:32

திறக்கப்பட்ட சிலைகள் குறித்த பகுதியை பாடப் புத்தகத்தில் சேர்க்கும்


மேலும் செய்திகள்











புதிய வீடியோ