உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை

சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை

கோவை:கோவை மாவட்டம் அன்னூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பால செல்வமுருகன் என்பவர் சார் பதிவாளராக பணியாற்றி வருகிறார். இங்கு தினமும் லட்சக்கணக்கில் லஞ்சம் பெறப்படுவதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திவ்யா தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் உள்பட எட்டு பேர் கொண்ட குழு இன்று இரவு 8 மணிக்கு சார் பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்து அதிரடியாக சோதனை நடத்தியது. இதில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பிடிபட்டு இருப்பதாக தெரிய வருகிறது. எனினும் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அலுவலக ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை