உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராயம் குடித்து பலியான 28 பேரின் உடல்கள் அடக்கம்

கள்ளச்சாராயம் குடித்து பலியான 28 பேரின் உடல்கள் அடக்கம்

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களில், 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டன. 7 பேரின் உடல்கள் புதைக்கப்பட்டன.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த இரண்டு பெண்கள் உட்பட 42 பேர் இறந்தனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின், ஊர்வலமாக கருணாபுரத்தில் உள்ள கோமுகி ஆற்றங்கரைக்கு கொண்டு வரப்பட்டது. 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டன. 7 பேரின் உடல்கள் புதைக்கப்பட்டன. மயான இடத்தில் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் கூடினர். முன்னதாக தகனம் செய்யும் இடத்தில், சிறிது நேரம் லேசான மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

தோஸ்த்
ஜூன் 21, 2024 11:05

நடைப்பயணத்தின் போது கள்ளக்குறிச்சியை எட்டிப் பாக்காதவங்க இப்போ கள்ளச்சாராய அரசியல் செய்ய சாவுக்கு வராங்க.


Bala
ஜூன் 20, 2024 21:52

rest in peace kallasarayam


N Srinivasan
ஜூன் 20, 2024 20:15

நல்ல வேளை 10 லட்சம் கொடுத்து நிறுத்திவிட்டீர்கள் எங்கே அரசு மரியாதை கொடுக்க செய்வீங்களோ என்று பயந்து விட்டேன்


NAGARAJ THENI KALPAKKAM
ஜூன் 20, 2024 22:08

ஐயோ ஐயோ


ديفيد رافائيل
ஜூன் 20, 2024 19:29

Government விற்றா குடிக்காம இருக்கலாமே. யாரையும் குடிக்க compulsion பண்ணலியே. Tasmac quality and price அதிகம்னா குடிக்காம இருந்திருக்கலாம். சாராயம் தேடி போற அளவுக்கு addict. செத்து தொலையட்டும் பரதேசிங்க. சாராயம் குடிச்சதுக்காக தியாகியாக்கி 10 lakh கொடுக்குறது தான் கஷ்டமா இருக்கு. சாராயம் குடித்து இறந்தவர்களின் பெண்கள் விதவையானது தப்பே இல்லை.


C KALIDAS
ஜூன் 20, 2024 18:41

இந்த கள்ளச் சாராய வியாபாரிகளோடு தொடர்பில் உள்ள காவல்துறை, வருவாய்த்துறை, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணி போர்வையில் சட்டம் ஒழுங்கை கெடுக்கும் ஜால்ரா கட்சி பிரமுகர்கள் யாராவது இருந்தால் அவர்களை இந்த நிகழ்வோடு முடக்கி துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்


Ram RV
ஜூன் 20, 2024 18:31

பூமியில் புதைக்கப் பட்டால் அடக்கம். எரியூட்டப் பட்டால் தகனம்.


ஆரூர் ரங்
ஜூன் 20, 2024 18:29

எல்லா போலீஸ்காரர்களையும் இடைநீக்கம் செய்துட்டாங்க . ஆனா// உங்களுக்கு மதுவிலக்கு அமைச்சரை மட்டும் ஒண்ணும் பண்ணல// இது எந்த ஊர் நியாயம் ? டாஸ்மாக் நாட்டு நியாயம்?


ஆரூர் ரங்
ஜூன் 20, 2024 18:24

குடிகாரர்கள் இறந்தது முக்கிய செய்தியா? எத்தனை பேர் செத்தாலும் தமிழ்க் குடிமகன்களுக்கு புத்தி வருதா?


ديفيد رافائيل
ஜூன் 20, 2024 19:22

உண்மை தான்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை