உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசு நிதியை விரைந்து தரவேண்டும்: தங்கம் தென்னரசு

மத்திய அரசு நிதியை விரைந்து தரவேண்டும்: தங்கம் தென்னரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மத்திய அரசு தமிழகத்திற்கு போதிய நிதி வழங்குவதில்லை எனக் குற்றம் சாட்டிய தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, விரைந்து நிதியை தரவேண்டும் எனக் கோரியுள்ளார்.சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் தங்கம் தென்னரசு கூறியதாவது: மாநில அரசுக்கு உதவி செய்யும் வகையில் மத்திய அரசு எதுவும் செய்யவில்லை. நம்மிடம் இருந்து செல்லும் ஒரு ரூபாய்க்கு 29 பைசாதான் திரும்ப வருகிறது. பா.ஜ., ஆளும் மாநிலங்களுக்கு அதிக வரி பகிர்வு மத்திய அரசால் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிய நிதிகள் மத்திய அரசிடம் இருந்து கிடைப்பதில்லை. மறைமுக வருவாய் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எதுவும் தெரிவிக்கவில்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=t72v3i4t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=02014 முதல் 2023 வரை மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு ரூ.4.75 லட்சம் கோடி மட்டுமே கிடைத்துள்ளது. நிதி பற்றாக்குறை 20 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. கடுமையான நிதி நெருக்கடியை தமிழக அரசு சிறப்பாக கையாள்கிறது. தமிழகத்தில் இருந்து நேரடி வரி வருவாயாக ரூ.6.23 லட்சம் கோடியை மத்திய அரசு பெற்றிருக்கிறது. உ.பி., கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மற்ற மாநிலங்களுக்கு மெட்ரோ திட்டங்களுக்கு உரிய நிதி கொடுக்கப்பட்டுள்ளது.

மாநில அரசே அதிக நிதி

ஆனால், தமிழகத்திற்கு மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்துக்கு நடப்பாண்டு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை. வெறும் ரூ.3,273 கோடி தான் மத்திய அரசு கொடுத்துள்ளது. கிராமப்புற வீடு வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு கொடுக்கும் நிதியை விட மாநில அரசு அதிக நிதி கொடுக்கிறது. தமிழகத்தில் வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் அண்மையில் பேரிடர்களை சந்தித்தன. தமிழக அரசு கோரிய உடனடி வெள்ள நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் கோடியை விரைந்து விடுவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

hari
ஜன 06, 2024 05:44

மதுரை to சென்னை எனும் ஓடாத பஸ்சில் ஒரு ஓசி பயணி வரார்


meenakshisundaram
ஜன 06, 2024 05:14

டாஸ்மாக் வருமானத்தை வச்சு இந்தியா பூராவும் நடத்தலாமே -ஸ்டாலினிடம் கேட்கவும்.


rajen.tnl
ஜன 05, 2024 23:29

தென்னரசு அவர்களே, நிர்மலா சீதாராமன் இப்போதான் தமிழகத்திற்கு வந்தாங்க .. அப்போது போய் கேட்கலாமே


sankaranarayanan
ஜன 05, 2024 22:58

மத்திய நிதி தொகை மாநிலத்தின் ஜனத்தொகையை கணக்கில் கொண்டுதான் கொடுக்கப்படுகிறது ஆதலால் தமிழ் நாட்டையும் உத்தர பிரதேசத்தையும் ஒப்பிடுவது தமிழக நிதி அமைச்சருக்கு சரியான வாதம் அல்ல இரண்டாவது டாஸ்மார்க்கை கடைகலிலுருந்து வரக்கூடிய வருமானம் பன்மடங்கு பற்றாக்குறையை ஈடுசெய்யும்


தாமரை மலர்கிறது
ஜன 05, 2024 21:24

கொடுத்த நிதியை முறையாக பயன்படுத்தினாலே போதும். தென்னரசிற்கு பசிக்கிறது என்பதற்காக அள்ளி கொடுக்க முடியாது. பணம் மரத்தில் காய்ப்பத்தில்லை.


Godyes
ஜன 05, 2024 18:36

அவங்ககிட்ட கேட்டு வாங்கி அது மேல உங்க பேர வச்சு விளம்பரம் பண்றீங்க.மைய அரசு ஒண்ணுமே செய்யவில்லை என தில்லாலங்கடி பேச்சு வேற.


செந்தமிழ் கார்த்திக்
ஜன 05, 2024 18:23

எப்படியும் எதிர்கருத்துகள் எழுதினால் வெட்டப்படும், அல்லது ஒட்டப்படும், அல்லது வெளியிட படாது இங்கே. பிறகு ஏன் பதில் சொல்லி நேரத்தை வீணாக்க வேண்டும்.


kumar c
ஜன 05, 2024 22:03

வெட்டி ஓட்டுனதே இவ்வளவுன்னா, முழுசா பிரசுரம் ஆனா எப்படி இருக்கும் .இங்கேயாவது வெட்டி ஓட்டியாவது பிரசுரம் ஆகுது வேறு சில இடங்களில் ஒண்ணுமே வெளிவராது


Siva
ஜன 05, 2024 18:21

2014-2023 வரை தமிழகத்திடம் மத்திய அரசு பெற்ற வரி ரூ.6.23 லட்சம் கோடி. தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய நிதி ரூ.6.96 லட்சம் கோடி. தமிழகத்திடம் இருந்து பெற்ற வரியை விட கூடுதலாக நிதி கொடுத்துள்ளோம்... நிர்மலா சீதாராமன்


rajen.tnl
ஜன 05, 2024 23:27

நியாயம், தர்மம், உண்மை இதுவெல்லாம் தமிழகத்தில் எடுபடாது.. நாங்கள் கேட்டதை தர வேண்டும்


Raju Ramasamy
ஜன 05, 2024 18:03

முதலில் எங்கள் தமிழ்நாட்டின் மொத்த கடனை கட்டி சரி பண்ணும் வரை எந்த இலவசமும் வேண்டாம் .... செய்வீர்களா ... இப்போது நீங்க வாங்கிய மொத்த கடனை கட்டவே 83 வருடம் ஆகி விடுங்க ....


sankar
ஜன 05, 2024 17:15

விவரம் இல்லாத உளறலுக்கு பெயர் போனவர்கள் தமிழக அரசும் அமைச்சர்களும், என்பது மிகவும் தெளிவு - இந்த அமைச்சர் மற்றும் முதல்வர் அவர்களின் பேச்சுகளின் மூலம் மக்களுக்கு தெளிவாக உணர்த்திவிட்டனர்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை