உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., கூட்டணியால் முதல்வருக்கு நடுக்கம்: அ.தி.மு.க.,

பா.ஜ., கூட்டணியால் முதல்வருக்கு நடுக்கம்: அ.தி.மு.க.,

சென்னை : கட்சி நிகழ்ச்சி ஒன்றில் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் பேசியதாவது: பா.ஜ.,வுடன் கூட்டணி வைப்பதற்கு முன், 'நீட்' தேர்வை ரத்து செய்வீர்களா என பழனிசாமியை கேட்கச் சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின். பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி என்றதும் அவருக்கு ஏற்பட்டிருக்கும் நடுக்கத்தின் விளைவுதான், இப்படிபட்ட கேள்வியெல்லாம். பா.ஜ.,வுடன் தி.மு.க., கூட்டணி வைத்தால் அது புண்ணியமாம். அதே நாங்கள் வைத்தால் அது பாவமாம். பழனிசாமியின் தேர்தல் வியூகம் என்னவென்று அறியாமல் புலம்பிய தி.மு.க.,வுக்கு சவுக்கடி கொடுப்பது போல பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்து, முதல் வெற்றியை அ.தி.மு.க., பெற்றிருக்கிறது.

தமிழகத்தில் தி.மு.க.,வை வெல்வதற்கு ஆளே இல்லை. இரண்டாவது இடத்துக்குத்தான் போட்டியே என்று கூறிக் கொண்டிருந்தவர்கள், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி என அறிவித்த வினாடியில் இருந்து, தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா... தனித்த ஆட்சியா என கேட்க வைத்துள்ளனர். ஆக, இரண்டாம் என்ற நிலையில் இருந்து மாறி, தற்போது தனித்த ஆட்சியா, கூட்டணி ஆட்சியா என பேச வைத்து விட்டது, பழனிசாமி வியூகம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anbuselvan
ஏப் 28, 2025 10:38

அவங்க நடுங்கினாலும், அவங்களோட basement strong என்பதை நீங்களும் உங்கள் கூட்டணி கட்சியினரும் உணர்ந்து அதற்கு ஏற்ற மாதிரி உங்கள் வியூகத்தை வகுக்க வேண்டும். உங்களுக்கு 2026 முக்கியம் உங்கள் கூட்டணி கட்சியில் இருக்கும் தேசிய கட்சிக்கு 2029 முக்கியம். இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தாங்கி முன்னோக்கி சென்றால் வெற்றி நிச்சயம்.


Barakat Ali
ஏப் 28, 2025 08:52

பாஜகவுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்க மாட்டோம் ன்னு சொன்ன அதிமுக, அதனால் கூட்டணியில் புகைச்சலை உண்டாக்கிய அதிமுக, அதன்மூலம் தொண்டர்களிடையே ஒற்றுமையைச் சீர்குலைத்த அதிமுக.. நாங்க பாஜக கூட கூட்டணி வெச்சதால திமுகவுக்கு நடுக்கன்னு சொல்றதுல லாஜிக் இல்லையே பாசு ????


J.Isaac
ஏப் 28, 2025 08:38

பரிதாபமாக நிலையில் அதிமுக


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை