உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தேர்தலுக்கு மட்டுமே கூட்டணி ஆட்சியில் கிடையாது

 தேர்தலுக்கு மட்டுமே கூட்டணி ஆட்சியில் கிடையாது

கடந்த, 2006 தேர்தலில், தி.மு.க.,விற்கு மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், காங்கிரசுடன் கூட்டணி ஆட்சி அமைக்குமாறு பிரணாப் முகர்ஜி கூறினார். அதற்கு, 'கூட்டணி ஆட்சி என்றால், நான் ஆட்சி அமைக்க மாட்டேன்' என கருணாநிதி கூறினார். இதையடுத்து, 'கருணாநிதி முதல்வராக இருக்கட்டும்,' என சோனியா கூறியதும் கருணாநிதி ஆட்சி அமைத்தார். திராவிட கட்சிகள், தேர்தலுக்கு மட்டும், மாறி, மாறி கூட்டணி வைத்தன. ஆனால், ஆட்சியில் கூட்டணி வைக்கவில்லை. திராவிட கட்சிகள் தோன்றிய நாள் முதல், தனித்து போட்டியிடாமல் இருந்த நிலையில், கடந்த 2016 தேர்தலில், கூட்டணி அமைக்காமல், தனித்து போட்டியிட்டு ஜெயலலிதா ஆட்சி அமைத்தார். வரும், 2026 தேர்தலில் பழனிசாமி தலைமையில், பா.ஜ.க., உள்ளிட்ட பல கட்சிகள் கூட்டணியில் இருந்தாலும், பழனிசாமி தலைமையில், தனித்தே அ.தி.மு.க., ஆட்சி அமையும். தற்போதைய தி.மு.க., ஆட்சியானது, வழிப்பறி, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம், ஊழல் என வலிமையற்ற ஆட்சியாக உள்ளது. - தம்பிதுரை, அ.தி.மு.க., - எம்.பி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி