உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓய்வூதிய திட்டம் ஆராயும் குழுவிற்கு எதிர்ப்பு கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்ய முடிவு

ஓய்வூதிய திட்டம் ஆராயும் குழுவிற்கு எதிர்ப்பு கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்ய முடிவு

சென்னை:ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆராய்வதற்கு, அரசு அமைத்துள்ள குழுவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்ய உள்ளதாக தலைமை செயலக ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.அதன் தலைவர் வெங்கடேசன், செயலர் ஹரிசங்கர் வெளியிட்ட அறிக்கை:தேர்தல் வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. அதை விட்டுவிட்டு, ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆராய்ந்து பரிந்துரை வழங்க, ஒன்பது மாத அவகாசத்துடன் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு, சங்கம் சார்பில் ஏற்கனவே கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆராயும் அதிகாரிகள் குழுவிற்கு, முதற்கட்ட எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு செல்ல, சங்க நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர். அதன்படி, அனைத்து தலைமை செயலக பணியாளர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்ற உள்ளனர். அதிகாரிகள் குழுவை கலைத்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை செய்யும் கொள்கை அறிவிப்பை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை