உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.80,000 கோடியில் அமைக்கப்படும் நாட்டின் பெரிய வாடவண் துறைமுகம்

ரூ.80,000 கோடியில் அமைக்கப்படும் நாட்டின் பெரிய வாடவண் துறைமுகம்

சென்னை:'மஹாராஷ்டிரா மாநிலத்தில் அமைக்கப்பட்டு வரும் நாட்டின் பெரிய, 'வாடவண்' துறைமுகம் பணிகள், வரும் 2029ல் முடிக்கப்படும்' என, மத்திய கப்பல் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டில், 12 பெரிய துறைமுகங்கள் உட்பட, 200க்கும் மேற்பட்ட துறைமுகங்கள் உள்ளன. இந்த துறைமுகங்களை நவீனமாக்கி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை அதிகரிக்க, மத்திய கப்பல் போக்குவரத்து துறை, 'சாகர்மாலா' போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இருப்பினும், சீனா போன்ற நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில் பெரிய அளவிலான துறைமுகம் இல்லாத நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் தஹானு அருகில், 'வாடவண் துறைமுகம்' 80,000 கோடி ரூபாயில், பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.

இது குறித்து, மத்திய கப்பல் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த ஆண்டில் இதற்கான பணிகள் துவங்கப்பட்டு முழுவீச்சில் நடந்து வருகின்றன. மொத்த பணிகளையும், வரும் 2029ம் ஆண்டில் முடிக்க திட்டமிட்டுள்ளோம்; இது, உலகின் 10 முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக இடம் பெறுவதோடு, இந்தியாவின் கடல்சார் வர்த்தகத்தையும் இரட்டிப்பாக்கும். ஆண்டுக்கு, 298 மில்லியன் டன் சரக்குகளை கையாள முடியும். இங்கிருந்து ஐரோப்பா, ஆப்ரிக்க நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கு சரக்கு போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்த முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Venugopal S
செப் 04, 2025 21:07

இந்தியாவில் உள்ள பன்னிரண்டு பெரிய துறைமுகங்களில் அதிகபட்சமாக மூன்று தமிழ்நாட்டில் தான் உள்ளது என்ற உண்மை சங்கிகளுக்கு தெரியுமா?


கஜால் குஜால்
செப் 04, 2025 14:03

சமச்சீர் கல்வி சந்திக்க சிரிக்குது..


lana
செப் 04, 2025 10:56

தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம். சாராய ஆலை அமைக்க உடனடியாக அனுமதி வழங்க படும். மற்ற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் அனைத்து திட்டங்களும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும்.


Mani . V
செப் 04, 2025 05:50

மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்டு பிறகு, தனியாருக்கு சல்லிசு விலைக்கு அதுவும் கடனில் கொடுக்கப்படும். பின்னர் அந்தக் கடனும் தள்ளுபடி செய்யப்படும்.


Priyan Vadanad
செப் 04, 2025 05:27

யார் கட்டுவது? யாருக்காக கட்டுவது? இதையும் தெரியப்படுத்தலாமே


Varadarajan Nagarajan
செப் 04, 2025 06:02

இங்கு கட்டினால் நமது நாட்டிற்குதானே பயன். யார் கட்டினால் என்ன? நல்லது யார்செய்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் நமக்கு வரவேண்டும். இதில் உள்ளர்த்தம் காண தேவையில்லை. எல்லாவற்றிலும் அரசியலா கண்ணோட்டமா?