தன் குடும்பம் வாழ வேண்டும் என தி.மு.க., ஆட்சி உள்ளது
தமிழகத்தில் நடக்கும் ஆட்சி, விவசாயிகள் மற்றும் அனைத்து தொழில் வர்க்கத்திற்கும் எதிரான ஒரு ஆட்சி. 'தன் குடும்பம் வாழ வேண்டும்; தனிமனிதன் சாக வேண்டும்' என்ற கோட்பாட்டில் தி.மு.க., ஆட்சி நடக்கிறது. கரும்பு டன்னுக்கு, 4,000 ரூபாய் தருவதாக கூறினர்; இதுவரை தரவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால், நாமக்கல் மாவட்டம் பெருந்துறையில் சிப்காட் வரவே வராது என உறுதியாக கூறுகிறேன். நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனில், ஏழு ரயில் நிறுத்தங்கள் உடனடியாக ஏற்படுத்த முடியும். அதற்கு, மத்திய அரசின் பணம் இருந்தால் தான் முடியும். மத்திய அரசுடன், மாநில அரசு இணக்கமாக இருந்தால் மட்டுமே அதிக நிதி பெற முடியும். கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, முதல்வராக இருந்த பழனிசாமி, 40,000 கோடி ரூபாய் வாங்கி வந்தார். கொங்கு மண்டலம் சிறப்பாக இருப்பதற்கு, பழனிசாமி தான் காரணம். கோவையில் மாணவிக்கு நடந்த கொடூரத்தை பார்த்தால், பெண் பிள்ளைகளை வைத்துள்ள அனைவருக்கும் கண்ணீர் வரும். இச்சம்பவம் இந்தியாவையே உலுக்கிவிட்டது. இதற்கெல்லாம் முடிவுகட்ட, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும். - நாகேந்திரன் தலைவர், தமிழக பா.ஜ.,