உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாலியல் குற்றம் அதிகரிப்பே தி.மு.க., அரசின் சாதனை

பாலியல் குற்றம் அதிகரிப்பே தி.மு.க., அரசின் சாதனை

தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தால், வட மாநிலங்களில் குழந்தைகள் இறந்தது, தமிழகத்திற்கு மிகப்பெரிய தலைகுனிவு. பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள், 51 சதவீதம் அதிகரித்துள்ளன. இதுதான் திராவிட மாடல் அரசின் சாதனை. திருமாவளவன் கார் - -பைக் மோதல் விவகாரத்தில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவடுவதை தடுக்க, மத்திய - மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தே.ஜ., கூட்டணி வெற்றி பெற, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பா.ஜ., மாநில தலைவர் நாகேந்திரனும் பயணம் துவக்கி உள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை தி.மு.க., ஏமாற்ற முடியாது. - -வாசன் தலைவர், த.மா.கா.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி