மன்னராட்சி கனவு நிராசையாகும்: இபிஎஸ்
பரமக்குடி: கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என மன்னராட்சிக்கு ஆசைப்படுகிறார்கள். அவர்களின் கனவு நிராசையாகும் என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறினார்.'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பரமக்குடியில் பேசியதாவது: திமுக ஆட்சி அமைந்து 50 மாதம் ஆகிறது.குடும்ப ஆட்சியாகவே நடக்கிறது. கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என மன்னராட்சிக்கு ஆசைப்படுகிறார்கள். அவர்களின் கனவு நிராசையாகும் அளவுக்கு அதிமுக வெல்லும். திமுக ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. மக்களைத் திசைதிருப்பி கவர்ச்சிகரமாகப் பேசி வாக்குகளை பெற்று, ஆட்சிக்கு வந்ததும் திமுக அந்தர்பல்டி அடித்துவிட்டது.திமுக மிகப்பெரிய சாதனை படைத்திருக்கிறது. எதில் தெரியுமா..? கடன் வாங்குவதில் தான். தமிழகத்தில் எல்லோரையும் கடனாளி ஆக்கிட்டார், பிறக்கும் குழந்தை மீதும் கடன் இருக்கிறது. நிதி மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டு வருவாய் பெருக்குவோம் என்றனர். நிபுணர் குழு அமைத்து 4 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கினார்கள். இப்போதும் 1 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்குகிறார்கள். அதையெல்லாம் வட்டியோடு திருப்பிச் செலுத்த வேண்டும். அது எல்லாமே மக்கள் தலையில் தான் விடியும். மக்கள் மீது கடன் சுமையை சுமத்திய ஆட்சி தேவையா? 2026 தேர்தலில் மரண அடி கொடுங்கள்.அதிமுக ஆட்சியில் கடைக்கோடி மக்களிடமும் திட்டம் போய் சேர்ந்தது. ஸ்டாலின் மாடல் அரசு பெயிலியர் மாடல் அரசு. இவ்வாறு இபிஎஸ் பேசினார்.