உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லுாரியில் அமலாக்க துறையினர் 2வது நாளாக சோதனை

கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லுாரியில் அமலாக்க துறையினர் 2வது நாளாக சோதனை

வேலுார்: வேலுாரில், தி.மு.க.,-- எம்.பி., கதிர் ஆனந்துக்கு சொந்தமான இன்ஜினியரிங் கல்லுாரியில், இரண்டாவது நாளாக நேற்று, அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், கல்லுாரி பண பரிவர்த்தனை விபரங்கள் மற்றும் கம்ப்யூட்டரில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள ஆவண விபரங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.நேற்று முன்தினம் காலை, 7:00 முதல், மதியம், 2:18 மணி வரை கதிர் ஆனந்த் வீட்டின் வெளியே அமலாக்கத்துறை அதிகாரிகள் காத்திருந்தனர். துபாய் சென்றிருந்த எம்.பி., கதிர் ஆனந்த், 'இ - மெயில்' மூலமாக, வேலுார் மாநகராட்சி துணை மேயரும், காட்பாடி தெற்கு பகுதி தி.மு.க., செயலருமான சுனில் குமார், காட்பாடி வடக்கு பகுதி தி.மு.க., செயலர் வன்னியராஜா, வழக்கறிஞர் பாலாஜி முன்னிலையில் சோதனை நடத்த அனுமதி அளித்தார்.

அறைகள் உடைப்பு

தொடர்ந்து, சோதனை தொடங்கப்பட்டு, நேற்று முன்தினம் இரவு, 8:30 மணியளவில் சுத்தி, உளி, கடப்பாரை கொண்டு அறைகள் உடைக்கப்பட்டு சோதனை நடத்தினர். இதில், சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், நேற்று அதிகாலை, 1:30 மணிஅளவில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சோதனை முடிந்தது. தி.மு.க., நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான கிடங்கில், சோதனை நிறைவடைந்த நிலையில், அங்கு, 20 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.எம்.பி., கதிர் ஆனந்துக்கு சொந்தமான இன்ஜினியரிங் கல்லுாரியில், 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், கல்லுாரி நிர்வாகம் செய்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை, அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள், கம்ப்யூட்டரில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள், கல்லுாரி பணம் வைக்கும் அறை ஆகியவற்றை சோதனை செய்தனர். கல்லுாரி பணம் வைக்கும் அறையில், கட்டுக்கட்டாக பணம் இருந்ததைக் கண்டறிந்து, நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில் வங்கி ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்களிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.

சம்பளத்தொகை

கல்லுாரியில், நேற்றும் இரண்டாவது நாளாக சோதனை தொடர்ந்தது. காலை வழக்கம்போல் கல்லுாரி திறக்கப்பட்டது, ஊழியர்கள், மாணவ - மாணவியர் உள்ளே சென்றபோது பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். கல்லுாரியில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொங்கல் பண்டிகையையொட்டி பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட இருந்த போனஸ் மற்றும் சம்பளத் தொகை மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியரிடம் வசூலிக்கப்பட்ட கல்வி கட்டணம் என, கல்லுாரி நிர்வாக ஊழியர்கள் தெரிவித்தனர்.கல்லுாரியில் சோதனை நீடிப்பதால், துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்., வீரர்கள், வளாகம் முழுதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Narasimhan
ஜன 05, 2025 11:27

இதற்கு முன்னால் நடந்த சோதனைகளில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள்? எல்லாம் வேடம்தான். கொள்ளையில் பங்கு கிடைத்தவுடன் கேஸ் மூடப்படும்


நிக்கோல்தாம்சன்
ஜன 05, 2025 08:27

துணைக்கு உதவியாய் இருக்கும் துறையிடம் இப்படி என்றால் , துணையிடமும் அதன் துணைவியிடமும் ?


jegadeesh
ஜன 05, 2025 07:44

எந்த தனியார் கல்லூரிகளிலும் எனக்கு தெரிந்த வகையில் பேராசிரியர்கள் அலுவலக ஊழியர்களுக்கு போனஸ் என்பதே கிடையாது.என்னென்ன கம்பி கட்டற கதையெல்லாம் விடுகிறார்கள் நீங்கள் சொல்வதுபோல அப்பாவும் மகனும் பரம யோக்கியன் போல பேட்டியளித்தார்.காசு வாங்கி ஓட்டு போட்டு இவர்களை வெற்றி பெற வைத்த மக்களை என்ன சொல்ல? செய்ய?


Mani . V
ஜன 05, 2025 05:22

தொரைமுருகன் சார், அந்த கொசு புகை ஏன் அடிக்கச் சொன்னீங்க? எது ஆதாரங்களை அடியாட்கள் அள்ளிக் கொண்டு போய் மறைப்பதை யாரும் பார்க்காமல் இருக்கவா?


Nandakumar Naidu.
ஜன 05, 2025 04:50

எல்லாமே டிஜிட்டல் மயம் என்னும் பட்ச்த்தில் பணம் எவ்வாறு வந்தது? போனஸ் எல்லாம் கூட டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் அனுப்பலாமே? எல்லாம் ஊழல் பணம். அப்பனும் ,பையனும் என்னோமோ ஹரிச்சந்திர மகாராஜாவின் சொந்தக்காரர்கள் போல பேசுவார்கள். தமிழக மக்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு வாக்களித்தால் இப்படித்தான் நடக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை