உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அப்துல் கலாம் பாராட்டிய நேர்மை மீனவருக்கு கொடுமை

அப்துல் கலாம் பாராட்டிய நேர்மை மீனவருக்கு கொடுமை

நாகப்பட்டினம்: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிடம் பாராட்டு பெற்ற நேர்மையான மீனவர் ஒருவர், தரமில்லாத படகை மாற்றும் விவகாரத்தில், ஆண்டுக்கணக்கில் அலைக்கழிக்கப்படும் கொடுமை நடந்து வருகிறது.நாகை, கீச்சாங்குப்பத்தை சேர்ந்தவர் தண்டபாணி, 58. இவருக்கு ஐந்து மகள்கள். கட்டுமரத்தில் மீன் பிடித்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.

தரமான படகு

இந்நிலையில், மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ், 2018 - 2019ம் ஆண்டு, 40 சதவீத மானியத்தில், 10 மீட்டர் நீளம் உடைய கண்ணாடி நாரிழை படகு, தமிழக மீன்வளத்துறையால் தண்டபாணிக்கு வழங்கப்பட்டது. இதற்காக மீன்வளத்துறை அறிவுறுத்தல்படி, 1.60 லட்சம் ரூபாயை தண்டபாணி, படகு கட்டுமான நிறுவனத்திற்கு செலுத்தினார்.தரமான படகு கட்டுவதற்காக கூடுதலாக, 36,000 ரூபாய் செலுத்தியுள்ளார். 2020ம் ஆண்டு புதிய படகு தண்டபாணிக்கு வழங்கப்பட்டது. மீன் பிடிக்க சென்ற புதிய படகில், கடல் நீர் உட்புகுந்து படகு சேதமானது. அதில் தத்தளித்த மீனவர்களை அவ்வழியே வந்த மற்ற மீனவர்கள் காப்பாற்றி கரை சேர்த்தனர். மீன்வளத்துறை அறிவுறுத்தல்படி, படகை கட்டுமான நிறுவனத்திடம் தண்டபாணி ஒப்படைத்தார். பல மாதங்களாகியும், பழுதடைந்த படகுக்கு மாற்றாக புதிய படகை, கட்டுமான நிறுவனம் வழங்காததால், நுகர்வோர் நீதிமன்றத்தை தண்டபாணி நாடினார்.

மேல் முறையீடு

சேதமடைந்த படகிற்கு இழப்பீடாக, 3.60 லட்சம் ரூபாய் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.வழங்க மறுத்து, அந்நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்நிலையில், தன் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது குறித்து, கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து மனு கொடுக்கும் போதெல்லாம், மீன்வளத்துறை தீர்வு காண மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தினாலும், அத்துறை தண்டபாணியை கண்டுகொள்ளவில்லை.ஐந்து ஆண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்த தண்டபாணி, புதிய படகு கட்டுவதற்காக கந்து வட்டிற்கு வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த முடியாமல் இன்னலுக்கு ஆளாகிஉள்ளார்.மீன்வளத்துறை அதிகாரிகள், படகு கட்டுமான நிறுவனத்துக்கு சாதகமாக பேசுவதோடு, கலெக்டர் உத்தரவையும் மதிக்காமல், தண்டபாணியை அலைக்கழிக்கின்றனர்.மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஜெயராஜ் கூறுகையில், ''படகு கட்டுமான நிறுவனம் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. ''வழக்கு முடிந்து தீர்ப்பு வந்த பின் தான் தெரியும். வாழ்வாதாரத்திற்காக வேறு திட்டத்தின் கீழ் படகு வழங்க பரிசீலிக்கப்படும்,'' என்றார்.சுனாமியில், தண்டபாணி இளைய மகள் இறந்ததாக, அரசு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியது. அவரது மகள் உயிருடன் ராமநாதபுரத்தில் மீட்கப்பட்டார். உடனடியாக அரசின் காசோலையை தண்டபாணி திரும்ப அளித்தார். இவரது நேர்மையை, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Oru Indiyan
மார் 22, 2025 12:03

தமிழ்நாட்டை விட்டு வெளியேறு மீனவா. இந்த அரசு மீனவர் எதிர்ப்பு அரசு. விவசாயிகள் எதிர்ப்பு அரசு. தொழிலாளர்கள் எதிர்ப்பு அரசு...


Mecca Shivan
மார் 22, 2025 11:44

இது கிருத்துவ மீனவர்களை மட்டுமே காப்பாற்றும் அரசு


rasaa
மார் 22, 2025 09:55

ஐயா, இங்கு நடப்பது திராவிட மாடல் ஆட்சி. நீதி, நேர்மை, நியாயம் என்றால் என்னவென்றே தெரியாது இவர்களுக்கு. இவர்களிடம் போராடுவதை விட்டுவிட்டு வேறு மாநிலத்திற்கு சென்று கூலி வேலை செய்து பிழைத்துக்கொள்ளுங்கள்.


Padmasridharan
மார் 22, 2025 09:32

நேர்மையா இருக்கிறவங்களுக்கு இந்த உலகத்தில் வாழ அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் அதிகார பிச்சைக்காரர்கள் இடம் கொடுக்கமாட்டார்கள். பொய் சொல்லி மத்தவங்ககிட்ட இருக்கிற பணத்தை கொள்ளை அடிக்கிறவங்கதான் வாழ்க்கை என்று சட்டம் சொல்லாமல் காவலர்கள் மூலமாக நிறைய கொடுமையான விஷயத்தில் எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள். இறப்பு வரை, இறந்த பின்பும் ஏமாற்றி பணம் பறிப்பவர்களதுதான் இந்த மாமனிதர்கள் .


rasaa
மார் 22, 2025 10:01

இவர் பல குற்றங்கள் செய்துள்ளார். முதலில் நேர்மையானவராக இருந்தது குற்றம். கலாம் என்றால் கலகம் என்று கூறியவரிடம் சற்சான்று பெற்றது இரண்டாவது குற்றம். எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் இந்து மத மீனவராக இருப்பது பெருங்குற்றம். இதுவே தேவசகாயம், இஸ்மாயில் என்றிருந்தால் ஒன்றிற்கு இரண்டாக கிடைத்திருக்கும்.


S Sivakumar
மார் 22, 2025 09:23

இந்த செய்தியை படிக்கும் போதே மனம் பதைக்க வைக்கிறது. ஆனால் இதை கையாளும் அரசு அதிகாரிகள் எப்படி எளிதாக கடந்து செல்கிறார்கள்? மாண்புமிகு தமிழக முதலமைச்சர் காதுகள் வரை எட்டுவதற்கு வாய்ப்பு உள்ளதா நடவடிக்கை எடுக்க படுமா?


Kalyanaraman
மார் 22, 2025 09:09

தண்டபாணிக்கு பதில் ஒரு டேவிட் ஆக இருந்தால் உடனடியாக கொடுத்து இருப்பாங்க.


மாயவரம் சேகர்
மார் 22, 2025 09:08

தமிழக அரசின் மீன்வளத்துறை பாதிக்கப்பட்டவருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் எல்லை தாண்டும் மீனவர் இலங்கையால் கைது படகு பறிமுதல் போன்ற விஷயங்களில் தமிழக அரசியல்வாதிகள் மத்திய பாஜக அரசை குறை கூறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இவரைப் போல இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்ட்டுள்ளனர் என தெரியவில்லை. நடுநிலை ஊடகங்கள் இந்த விஷயத்தை விவாதிக்க வேண்டும்.


சமீபத்திய செய்தி